CSK vs MI : நான் அவரோட தீவிர ரசிகன். அதன் அதே ஸ்டைல்ல கொண்டாடுறேன் – ஆட்டநாயகன் மதீஷா பதிரானா

Pathirana
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியானது முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தது.

Pathirana 1

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணி சென்னை அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 140 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 17.4 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 140 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சென்னை அணி சார்பாக சிறப்பாக பந்துவீசிய இளம் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பதிரானா நான்கு ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சே வெற்றிக்கு காரணம் என்பதால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

Pathirana 2

இந்நிலையில் போட்டி முடிந்து தனது இந்த சிறப்பான பந்துவீச்சு குறித்து பேசிய மதீஷா பதிரானா கூறுகையில் : சென்னை அணியுடன் எனது பயணம் கடந்த ஆண்டு துவங்கியது. ஆனாலும் கடந்த ஆண்டு நான் மாற்றுவீரராகவே அணியில் இடம் பெற்றிருந்ததால் எனக்கு இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

ஆனால் இந்த சீசனில் நான் அனைத்து போட்டிகளிலுமே விளையாடி வருவது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை அணியின் நிர்வாகம் என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பினை வழங்கி விளையாட வைத்து வருகிறது. டி20 கிரிக்கெட்டில் இன்றைய போட்டியில் நான் பந்துவீசியது தான் சிறப்பான பந்துவீச்சு என்று நினைக்கிறேன். என்னுடைய இந்த செயல்பாட்டை நினைத்து உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

இதையும் படிங்க : CSK vs MI : நாங்க செய்ஞ்ச இந்த தப்பு தான் சென்னை அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் – ரோஹித் சர்மா பேட்டி

அதோடு நான் விக்கெட்டை வீழ்த்திய பிறகு அமைதியாக விக்கெட்டை கொண்டாடுவதற்கு காரணம் யாதெனில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிரமான ரசிகன் நான் எனவே அவரது ஸ்டைலில் எனது கொண்டாட்டத்தை பின்பற்றி வருகிறேன் என மதீஷா பதிரானா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement