40 ஆண்டுகள் பழமையான வின்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஊர்சுற்றும் தல தோனி – ரேர் கலெக்ஷன் தான் புடிக்கும் போல

MS-Dhoni Car
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த 2004-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2019-ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக மிகச் சிறப்பான பங்களிப்பினை அளித்துள்ளார். மூன்று வகையான இந்திய அணிக்குமே கேப்டனாக செயல்பட்ட அவரது தலைமையின் கீழ் இந்திய அணி பல வெற்றிகளை பெற்றுள்ளது. மேலும் கூல் கேப்டன் என்ற பெயருடனும் ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் மதிப்புமிக்க வீரராக திகழ்ந்து வருகிறார்.

குறிப்பாக ஐ.சி.சி யின் 20 ஓவர் உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து வகையான ஐசிசி கோப்பை கொடுத்த ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனி பெற்றுள்ளார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தாலும் இன்றளவும் தோனி ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அண்மையில் 42 வயதை எட்டிய தோனி கிரிக்கெட்டின் மீது எவ்வளவு ஆர்வமாக இருக்கிறாரோ அதேபோன்று மோட்டார் பைக்குகள் மற்றும் கார் மீதும் ஆர்வம் கொண்டவர் என்பது நாம் அறிந்ததே.

அண்மையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூட : தோனியின் பண்ணை வீட்டில் 50-க்கும் மேற்பட்ட பைக்குகள், பத்துக்கும் மேற்பட்ட அரிய வகை கார்கள் இருந்ததை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது தோனி ராஞ்சியில் 40 ஆண்டுகள் பழமையான ஒரு விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வலம் வருவதை ரசிகர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : அயர்லாந்து தொடரில் பாண்டியா ஓய்வெடுத்தால் இந்தியாவை வழி நடத்துவதற்கு தகுதியான 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

எப்பொழுதுமே அரியவகை கார்கள், பைக் மீது பிரியம் கொண்ட தோனி அதனை பராமரித்து அவ்வப்போது ஓட்டுவது வழக்கம். அந்த வகையில் இந்த ரோல்ஸ் ராய்ஸ் காரையம் அவர் ஓட்டி செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வருவது குறிப்பிடத்தக்கது. 1980 ஆண்டு புழக்கத்தில் இருந்த வின்டேஜ் காரை தோனி தனது பண்ணை வீட்டில் உள்ள கேரேஜில் வைத்து பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement