அயர்லாந்து தொடரில் பாண்டியா ஓய்வெடுத்தால் இந்தியாவை வழி நடத்துவதற்கு தகுதியான 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

IND-vs-IRE
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. அதைத்தொடர்ந்து அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா அங்கு ஆகஸ்ட் 18, 20, 23 ஆகிய தேதிகளில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் அயர்லாந்து பலவீனமான அணி என்பதால் வழக்கம் போல இளம் வீரர்களுடன் கூடிய இந்திய அணி களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

IND vs IRE

- Advertisement -

சொல்லப்போனால் 2022இல் அயர்லாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இளம் இந்திய அணி 2 – 0 (2) என்ற கணக்கில் வென்றது. அதனால் இம்முறையும் பாண்டியா தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் 2023 உலக கோப்பையில் அவர் முதன்மை வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக இருக்கிறார்.

எனவே ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு நிகரான முக்கிய வீரராக கருதப்படும் அவர் பணிச்சுமையை நிர்வகித்து உலகக்கோப்பையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவதற்காக இந்த அயர்லாந்து டி20 தொடரில் ஓய்வெடுக்க உள்ளதாக என்று செய்திகள் வெளியாகியுள்ளது. ஒருவேளை அப்படி நடந்தால் அவருக்கு பதில் அத்தொடரில் இந்தியாவை வழிநடத்த தகுதியான 3 வீரர்களை பற்றி பார்ப்போம்:

Suryakumar Yadav.jpeg

1. சூரியகுமார் யாதவ்: தாமதமாக 30 வயதில் அறிமுகமானாலும் கடந்த 2 வருடங்களில் பெரும்பாலான போட்டிகளில் எப்படி பந்து வீசினாலும் மைதானத்தின் அனைத்து புறங்களிலும் அடித்து நொறுக்கி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியுள்ள இவர் கடைசியாக நடைபெற்ற நியூசிலாந்து டி20 தொடரில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

எனவே இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் போதியளவுக்கு விளையாடி நிறைய அனுபவத்தை கொண்டுள்ளதால் இந்த அயர்லாந்து டி20 தொடரில் தற்காலிக கேப்டனாக செயல்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Jasprit Bumrah

2. ஜஸ்பிரித் பும்ரா: இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளரானன இவர் காயத்தால் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையுடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் பங்கேற்காதது தோல்வியை கொடுத்தது. அந்த நிலையில் தற்போது குணமடைந்து வரும் இவர் இந்த அயர்லாந்து தொடரில் விளையாடி கம்பேக் கொடுக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

அத்துடன் ஏற்கனவே 2022 ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ரத்து செய்யப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியில் அவர் கேப்டனாக செயல்பட்ட பெருமையும் அனுபவத்தையும் கொண்டுள்ளார். அதன் காரணமாக இந்த அயர்லாந்து டி20 தொடரில் கம்பேக் கொடுக்க தயாராகியுள்ள அவரை தேர்வுக்குழு கேப்டனாக அறிவித்தால் ஆச்சரியமில்லை என்றே சொல்லலாம்.

3. ருதுராஜ் கைக்வாட்: மகாராஷ்டிராவை சேர்ந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு கடந்த 2020 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி 2021 சீசனில் 635 ரன்கள் குவித்து சென்னை 4வது கோப்பையை வெல்ல உதவினார். அதே போல இந்த வருடமும் சிறப்பாக செயல்பட்டு சென்னை 5வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் ஏற்கனவே உள்ளூர் கிரிக்கெட்டில் மகாராஷ்டிராவின் கேப்டனாக செயல்பட்டு 2022 விஜய் ஹசாரே கோப்பையின் ஒரு போட்டியில் ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்த அனுபவத்தை கொண்டுள்ளார்..

இதையும் படிங்க:உலகக்கோப்பை 2023 : இந்தியா பாகிஸ்தான் மோதும் லீக் போட்டி மாற்றியமைக்க வாய்ப்பு – ஏன் தெரியுமா?

அதனால் ஷிகர் தவானையும் தாண்டி வருங்காலத்தை கருத்தில் கொண்டு வரும் செப்டம்பர் மாத இறுதியில் சீனாவில் நடைபெறும் 2023 ஆசிய விளையாட்டு போட்டிகளில் இவர் இளம் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று தேர்வுக்குழு அறிவித்துள்ளது. எனவே அந்தத் தொடருக்கு முன்பாகவே முன்னோட்டம் பார்க்கும் வகையில் இந்த அயர்லாந்து தொடரில் பாண்டியாவுக்கு பதில் இவர் கேப்டனாக அறிவிக்கப்படுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளது என்றே சொல்லலாம்.

Advertisement