எல்லோரையும் பேட்டிங் இறக்கி விட்டு நான் 7 ஆவதாக விளையாட இதுவே காரணம் – தோனி வெளிப்படை

Dhoni
Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் தொடரின் லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 216 ரன்கள் குவிக்க, 217 ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

csk vs rr

அதிரடியாக ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் சஞ்சு சாம்சன் 72 ரன்கள் ஸ்டீவன் ஸ்மித் 69 ரன்கள் விளாசினார். இதனை தொடர்ந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஒவ்வொருவராக ஆட்டம் இழந்து கொண்டிருந்தனர். ஆனால் சென்னை அணியில் டு பிளிசிஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்து இருந்தார்.

- Advertisement -

எப்படியும் சென்னை அணி தோற்க போகிறது என்பதை உறுதி செய்த தோனி கடைசி வரை களத்தில் நின்று ரன்ரேட் குறைய விடாமல் இருக்க கடைசி ஓவரில் 3 சிக்சர்கள் அடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். ஆனால் தோனி எப்போதும் தனது 5வது இடத்தில் களமிறங்குவார். ஆனால் நேற்று 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அவர் மற்ற வீரர்களையும் எல்லாம் இறக்கிவிட்டு விட்டு கடைசியில் தான் இறங்கினார்.

Dhoni-1

இந்நிலையில் தான் ஏன் 7 யாராவது இடத்தில் களமிறங்கினேன் என்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் நீண்டநாளாக பேட்டிங் பிடிக்கவில்லை அதுமட்டுமின்றி 14 நாள் நான் தனிமையில் இருந்தேன். அதுவும் எனக்கு உதவவில்லை மேலும் சாம் கர்ரன் மற்றும் ஜடேஜா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பி அவர்களால் என்ன செய்ய முடியும் என்பதை பார்க்க விரும்பினோம்.

curran

இது போன்ற விஷயங்கள் வேலை செய்யவில்லை என்றால் நாம் மீண்டும் சரியாக எதை செய்வோமோ அதனை செய்ய சென்று விடலாம். டு பிளேஸிஸ் தன்னை தானே தகவமைத்துக் கொண்டு அற்புதமாக விளையாடினார் என்று தெரிவித்துள்ளார் தோனி.  இதன் காரணமாகத்தான் தோனி கடந்த இரண்டு போட்டிகளிலும் மற்ற வீரர்களை இறக்கிவிட்டு விட்டு கடைசியாக இறங்கினார் என்று தற்போது தெரியவந்துள்ளது.

Advertisement