- Advertisement -
ஐ.பி.எல்

தோனியின் இடத்தை இம்பேக்ட் பிளேயராக வந்து நிரப்பப்போவது யார்? – கைவசம் இருக்கும் ஆப்ஷன்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி இந்தியாவில் இன்று துவங்கி நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான சி.எஸ்.கே அணியிலும் இடம் பிடித்திருந்தார். தற்போது 44 வயதான தோனிக்கு இதுவே கடைசி சீசன் என்பதினால் இந்த தொடரில் விளையாடி முடித்த பின்னர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து அதிகாரப்பூர்வமாக அவர் ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தோனியும் சி.எஸ்.கே அணியுடன் இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வந்தார்.

தோனியின் இடத்தை நிரப்பப்போவது யார்? :

அதனை தொடர்ந்து நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் தொடரின் போட்டிகளில் விளையாட தயாராக இருந்த வேளையில் போட்டியின் துவக்க நாளான இன்று அவருக்கு கெண்டைக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் இரண்டு வாரங்கள் விளையாட மாட்டார் என சி.எஸ்.கே அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தோனியின் ரசிகர்கள் மத்தியில் பெரியளவு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

- Advertisement -

ஏனெனில் இந்த சீசனே அவருக்கு கடைசி தொடராக பார்க்கப்படும் வேளையில் இந்த தொடரில் தோனி விளையாடுவதை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் இந்த தொடர் இன்று துவங்க இருக்கும் வேளையில் அவர் முதல் இரண்டு வாரங்கள் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தோனி இந்த தொடரின் முதல் இரண்டு வாரங்கள் விளையாடாமல் போகும் பட்சத்தில் அவருக்கு பதிலாக யார் விளையாடப்போகிறார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே சஞ்சு சாம்சன் இந்த அணியில் இருப்பதால் அவரே முதன்மை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்படுவார். இதன் காரணமாக தோனியின் இடத்தை இம்பேக்ட் ப்ளேயராக நிரப்ப ஒரு கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தோனியின் இடத்தை நிரப்ப ஏகப்பட்ட வீரர்கள் காத்திருக்கும் வேளையில் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு அந்த இடத்தில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சீசனின் போது சிஎஸ்கே அணிக்காக அறிமுகமாகி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய உர்வில் பட்டேல் முதல் ஆப்ஷனாக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : 2026 ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டியிலேயே இந்த அதிசயம் நடக்க வாய்ப்பிருக்கு – அஷ்வின் கணிப்பு

அவருக்கு அடுத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மாவும் இந்த பட்டியலில் இருக்கிறார். அதோடு உள்ளூர் போட்டிகளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வரும் சர்பராஸ் காணும் அவரது இடத்திற்காக காத்திருப்பதால் இந்த மூன்று வீரர்களின் யாரேனும் ஒருவருக்கு இம்பேக்ட் பிளேயராக சிஎஸ்கே அணியில் விளையாட ஆரம்பகட்ட போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -