தோனி பாய் அப்படி சொன்ன அப்புறமும் அடிக்க மாட்டேனா.. ஷிவம் துபே உற்சாக பேட்டி

Shivam Dube 4
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மொகாலியில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் முகமது நபி 42, ஓமர்சாய் 29 ரன்கள் எடுத்த உதவியுடன் 159 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.

அதை சேசிங் செய்த இந்தியாவுக்கு சிவம் துபே அதிரடியாக 60* ரன்களும் ஜிதேஷ் சர்மா 31 ரன்களும் எடுத்து 17.3 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 60* ரன்களும் பந்து வீச்சில் 1 விக்கெட்டும் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய சிவம் துபே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்ட அவர் ஐபிஎல் தொடரிலும் பெங்களூரு, ராஜஸ்தான் போன்ற அணிகளில் தடுமாறி வந்தார்.

- Advertisement -

தோனியின் தன்னம்பிக்கை:
அதைத் தொடர்ந்து சென்னை அணியில் வாங்கப்பட்ட அவர் தோனி தலைமையில் கடந்த வருடம் கேரியரிலேயே உச்சமாக 411 ரன்கள் விளாசி 5வது கோப்பையை வெல்ல உதவினார். அதனால் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தேர்வாகி இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல உதவிய அவர் தற்போது சீனியர் அணியிலும் கம்பேக் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்று அசத்தியுள்ளார்.

இந்நிலையில் தம்மை சிறந்த வீரர் என்று கேப்டன் தோனியை பலமுறை பாராட்டியதால் கிடைத்த தன்னம்பிக்கை தான் சமீப காலங்களில் சிறப்பாக செயல்படுவதற்கான உத்வேகத்தை கொடுத்துள்ளதாக சிவம் துபே நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி போட்டியில் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “மஹி பாயிடம் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். மிகப்பெரிய வீரரான அவர் ஒரு லெஜெண்ட். அவரைப் பார்த்து நான் தொடர்ந்து கற்று வருகிறேன்”

- Advertisement -

“அவர் பல்வேறு சூழ்நிலையில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை என்னிடம் தொடர்ந்து சொல்லி வருகிறார். அவர் கொடுத்த ஆலோசனைகளில் சில எனக்கு வேலை செய்துள்ளது. அதை விட அவர் பல நேரங்களில் என்னை நல்ல வீரராக மதிப்பிட்டுள்ளார். அவரைப் போன்றவர் என்னை நல்ல வீரர் என்று மதிப்பிட்டால் பின்னர் நான் கண்டிப்பாக சிறப்பாக விளையாடுவேன்”

இதையும் படிங்க: இந்தியாவ குறை சொல்லாதீங்க.. சச்சினின் அந்த சாதனையை கோலி உடைப்பாரு.. லெஜெண்ட் டேவிட் லாய்ட்

“அதனால் என்னுடைய தன்னம்பிக்கையும் உயர்ந்துள்ளது. பவுலிங்கை பொறுத்த வரை கடினமாக பயிற்சிகளை எடுத்து வந்த எனக்கு இன்று கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினேன். அத்துடன் போட்டியை பொறுத்து உங்களுக்கு 2 – 3 ஓவர்கள் தொடர்ந்து கொடுப்பேன் என்று ரோகித் சர்மாவும் தெரிவித்திருந்தார். அந்த வகையில் பந்து வீச வாய்ப்பு கிடைப்பது எனக்கு பெரிய நேர்மறையான விஷயமாகும்” என்று கூறினார்.

Advertisement