MS Dhoni : தோனியிடம் பந்து சென்றதும் நடையைகட்டிய கொல்கத்தா வீரர் – வீடியோ

நேற்றைய கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 11 ஓவரை வீச இம்ரான் தாஹிர் வந்தார். அப்போது கொல்கத்தா அணி 10 ஓவர்களுக்கு 47 ரன்களை மட்டும் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து

Gill
- Advertisement -

நேற்றைய கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் 11 ஓவரை வீச இம்ரான் தாஹிர் வந்தார். அப்போது கொல்கத்தா அணி 10 ஓவர்களுக்கு 47 ரன்களை மட்டும் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து கொண்டு இருந்தது. அப்போது தாஹிர் வீசிய முதல் பந்தினை சற்று முன்னால் வந்து ஆட நினைத்த கொல்கத்தா அணியின் இளம் வீரர் கில் பந்தை கணிக்க தவறிவிட்டார். ஸ்டம்பின் பின்னால் இருந்த தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்ய திரும்பி கூட பார்க்காமல் கில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 23ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் சென்னை அணிக்கு 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

Dhoni

கொல்கத்தா அணி சார்பாக 4 வீரர்கள் டக் அவுட் ஆனார்கள். அதிகபட்சமாக ரசல் 44 பந்துகளில் 50 ரன்களை அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும். ரசலின் இந்த ஆட்டம் காரணமாகவே கொல்கத்தா அணி ஓரளவு ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர் 4 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

Chahar

பின்னர் ஆடிய சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 111 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. சென்னை அணி சார்பாக துவக்க ஆட்டக்காரர் டுபிலிஸிஸ் ஆட்டமிழக்காமல் 43 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். தீபக் சாகர் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement