இளம் நடிகருக்கு கால்பந்து கற்றுக்கொடுக்கும் தோனி..! வைரலாகும் புகைப்படம்.!

Ms-Dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி சிறந்த கேப்டன்,பேட்ஸ்மேன், கீப்பர் என்று பெயரெடுத்து இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். தோனி கிரிக்கெட்டில் மட்டும் புலியல்ல, கால்பந்து விளையாட்டிலும் மிகுந்த கெட்டிக்காரராக விளங்கி வருகிறார். சமீபத்தில் தோனி,பாலிவுட் நடிகர் இஷான் கத்தாருடன் கால்பந்து விளையாடிய சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ms_dhoni_and_ishaan_khattar

தோனி,இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணியில் டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்குபெற்று விளையாடி வந்தார். தற்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வரும் ஆகஸ்ட் மாதம் பங்கேற்க உள்ளது. டெஸ்ட் போட்டியில் இருந்து ஒய்வு பெற்றதால் தோனி தற்போது தனது ஓய்வான நேரத்தை ஜாலியாக செலவழித்து வருகிறார்.

சமீபத்தில் மும்பையில் உள்ள கால்பந்து மைதானத்தில் பாலிவுட் இளம் நடிகரான இஷான் கத்தாருடன் கால் பந்து விளையாடி மகிழ்ந்துள்ளார் தோனி. இஷான் கத்தார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூரின் சகோதரர் ஆவர். சமீபத்தில் இஷான் கத்தாருடன் கால்பந்து விளையாடிய தோனி, இஷானுக்கு கால்பந்து விளையாட்டுத் தொடர்பான சில டிப்ஸ்களையும் வழங்கியுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

dhoni

தோனி தனது சிறு வயது முதலே கால்பந்து விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். தோனியின் சிறுவயதில் அவரது பள்ளியில் கால்பந்து விளையாடி கொண்டிருந்த போது அவரது கோல் கீப்பிங் திறமையை பார்த்த அப்பள்ளியில் இருந்த கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவர் தோனியை பள்ளியின் கிரிக்கெட் அணியில் கீப்பரா சேர்த்துக் கொண்டார் என்று சில பேச்சுகளும் நீண்ட நாட்களாக நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.