இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வருகிறார். கடந்த 2016இல் தோனி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான அவர் குறைந்த தூரம் ஓடிவந்து வித்தியாசமாக பந்து வீசினார். அப்போது இந்த ஆக்சனை வைத்துக்கொண்டு பும்ரா நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது என்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க முடியாது என்றும் பேச்சுக்கள் காணப்பட்டன.
இருப்பினும் வைராக்கியத்தால் அசத்திய பும்ரா 2018இல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி 2019ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார். அப்போதிலிருந்து 3 வகையான கிரிக்கெட்டிலும் துல்லியமாகவும் வேகமாகவும் பந்து வீசும் அவர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் அவர் 15 விக்கெட்டுகளை என்ற எக்கனாமியில் எடுத்தார்.
தல தோனி பாராட்டு:
அந்தத் தொடரில் ஃபைனல் உட்பட அனைத்து போட்டிகளிலும் தேவைப்படும் நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்து கொடுத்த பும்ரா இந்தியா 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக தொடர்நாயகன் விருதையும் என்று அவரை தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி பாராட்டினார்.
அத்துடன் தற்சமயத்தில் ஜஸ்ப்ரித் பும்ரா உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக திகழ்வதாக வாசிம் அக்ரம், பிரட் லீ போன்ற ஜாம்பவான்கள் பாராட்டினர். இந்நிலையில் உலகிலேயே தற்சமயத்தில் ஜஸ்பிரித் பும்ரா தான் தமக்கு மிகவும் பிடித்த பவுலர் என்று முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி பாராட்டியுள்ளார். ஆனால் தமக்கு மிகவும் பிடித்த இந்திய பேட்ஸ்மேனை தேர்ந்தெடுக்க முடியாது என்றும் தோனி கூறியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் தோனி பேசியது பின்வருமாறு. “தற்போது மிகவும் பிடித்தவராக பும்ரா இருப்பதால் பவுலரை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிது. ஆனால் பேட்ஸ்மேனை தேர்ந்தெடுப்பது மிகவும் கடினம். ஏனெனில் நம்மிடம் நிறைய நல்ல பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அதற்காக நம்மிடம் நல்ல பவுலர்கள் இல்லை என்று அர்த்தமில்லை”
இதையும் படிங்க: டிஎன்பிஎல் 2024 : 57 ரன்ஸ்.. எலிமினேட்டரில் அட்டகாசம் செய்த அஸ்வின்.. சேப்பாக்கதை நாக் அவுட் செய்த திண்டுக்கல்
“தற்போது நமது பேட்ஸ்மேன்களில் நான் பார்க்கும் ஒருவர் நன்றாக பேட்டிங் செய்வது போல் தெரிகிறது. ஆனால் மற்றொருவரை பார்க்கும் போது அவரும் அசத்துகிறார். எனவே இந்திய அணி நன்றாக செயல்படும் வரை நான் சிறந்த பேட்ஸ்மேனை தேர்ந்தெடுக்க விரும்பவில்லை. அவர்கள் தொடர்ந்து ரன்கள் அடிக்க விரும்புகிறேன். இருப்பினும் எனக்குப் பிடித்த பவுலரை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று கூறினார்.



