- Advertisement -
ஐ.பி.எல்

தோல்விக்கு இதான் காரணம்.. ப்ரேவிஸ் மாதிரி சிஎஸ்கே இளம் வீரர்களுக்கு இதான் என் அட்வைஸ்.. தோனி பேட்டி

ஐபிஎல் 2025 தொடரில் மே 20ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 62வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் 4வது வெற்றியைப் பெற்று இத்தொடரை நிறைவு செய்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய சிஎஸ்கே மீண்டும் தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 187/8 ரன்களை மட்டுமே குவித்தது.

அதிகபட்சமாக தேவால்ட் ப்ரேவிஸ் 42, ஆயுஷ் மாத்ரே 43, சிவம் துபே 39 ரன்கள் எடுத்தார்கள். ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக யுவ்திர் சிங், ஆகாஷ் மாத்வால் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய ராஜஸ்தானுக்கு துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் 36, சூர்யவன்சி 57 ரன்களை அதிரடியாக எடுத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

சென்னை தோல்வி:

அதே போல மிடில் ஆர்டரில் கேப்டன் சஞ்சு சாம்சன் 41 (31) ரன்கள் அடித்து அசத்தினார். இறுதியில் துருவ் ஜுரேல் 31* (12), ஹெட்மேயர் 12* (5) ரன்கள் அடித்ததால் 17.1 ஓவரிலேயே 188/4 ரன்களை எடுத்த ராஜஸ்தான் ஆறுதல் வெற்றி பெற்றது. மறுபுறம் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் சென்னை 10வது தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில் இப்போட்டியில் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு காரணமானதாக கூறும் சிஎஸ்கே கேப்டன் தோனி தங்களுடைய இளம் வீரர்களுக்கு சில ஆலோசனை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் அடித்தது நல்ல இலக்கு. ப்ரேவிஸ் இன்னிங்ஸ் ரிஸ்க் எடுத்து நல்ல இன்னிங்ஸ் விளையாடினார்”

- Advertisement -

தோனி அட்வைஸ்:

“அந்த இடத்தில் தான் நாங்களும் முன்னேற வேண்டியிருந்தது. இன்றைய போட்டியில் ரன்ரேட் உயர்வாக இருந்தது. ஆனால் மீண்டும் ஆரம்பத்திலேயே நாங்கள் 2 – 3 விக்கெட்டுகளை இழந்து விட்டோம். அன்சுல் கம்போஜ் சிறப்பாக பவுலிங் செய்தார். நிறைய மூவ்மெண்டை பெறும் அவருடைய பந்துகள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட வேகமாக உங்களை அடிக்கும். அது நல்லது. பவர் பிளேவில் பௌலிங் செய்வது மிகவும் கடினம். ஆனால் அங்கே 3 ஓவர்களை வீசிய அவர் நன்றாக விளையாடினார்”

இதையும் படிங்க: 5க்கு 5.. 10 தோல்விகளால் சிஎஸ்கே மோசமான சாதனை.. ஆறுதல் வெற்றியையும் பறித்த ராஜஸ்தான் பரிதாபம்

“எங்களுடைய இளம் வீரர்கள் தொடர்ச்சியாக அசத்த முயற்சிக்க வேண்டும். ஆனால் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் அடிக்கப் பார்த்தால் தொடர்ச்சியாக ரன்கள் குவிக்க முடியாது. எங்கள் வீரர்களிடம் எந்த நேரத்திலும் சிக்சர்கள் அடிக்கும் திறமை இருக்கிறது. எனவே எதிர்பார்ப்புகள் உயரும் போது அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் சீனியர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் கற்றுக்கொண்டு முன்னேறுங்கள். இவை அனைத்தும் போட்டியைப் படிப்பதைப் பற்றியதாகும். இதுவே சிறப்பாக செயல்படும் எங்களுடைய இளம் வீரர்களுக்கான என்னுடைய அறிவுரையாகும்” என்று கூறினார்.

- Advertisement -