ஆல் கிரேட் பெயர்களில் இருப்பதை என்றென்றும் போற்றுவேன்.. ஐசிசி வழங்கிய கெளரவம் பற்றி தோனி

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனிக்கு ஹால் ஆஃப் பேம் விருதை வழங்கி ஐசிசி கௌரவித்துள்ளது. 2004 – 2019 வரையிலான காலகட்டங்களில் இந்தியாவுக்காக 3 விதமான கிரிக்கெட்டிலும் விளையாடிய அவர் 17,000க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றியமைத்த அவர் மிடில் ஆர்டரில் களமிறங்கி நிறையப் போட்டிகளை வென்று கொடுத்துள்ளார்.

அதனால் மிகச்சிறந்த ஃபினிஷராக போற்றப்படும் தோனி தலைமையில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. மேலும் 2007 டி20 உலகக் கோப்பையை வென்ற அவரது தலைமையில் 28 வருடங்கள் கழித்து 2011 உலகக் கோப்பை இந்தியா வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

தோனிக்கு கெளரவம்:

மேலும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற தோனி 3 விதமான ஐசிசி வெள்ளைப் பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாகவும் உலக சாதனை படைத்தார். அந்தத் தொடருக்கு முன்பாக சீனியர்களை கழற்றி விட்ட அவர் ரோஹித், தவான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து இந்திய அணியின் அடுத்த தலைமுறையை வளமாக கட்டமைத்தார். அப்படி சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக தோனி நிறைய பங்காற்றியிருந்தார்.

அவருடைய பங்கை பாராட்டும் வகையில் ஐசிசி இந்த கௌரவமிக்க பெருமையை வழங்கியுள்ளது. இதன் வாயிலாக கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட், விரேந்தர் சேவாக் போன்ற ஜாம்பவான்களுக்கு பின் ஐசிசி ஹால் ஆஃப் பேம் கௌரவத்தை வென்ற 11வது இந்தியராக தோனி சாதனை படைத்துள்ளார். அதை ஏற்றுக் கொண்டுள்ள தோனி இந்த கௌரவத்தை எப்போதும் போற்றுவேன் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

தோனி பெருமிதம்:

இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் பெயரிடப்பட்டுள்ளது பெருமைக்குரியது. இது தலைமுறைகள் மற்றும் உலகம் முழுவதிலும் கிரிக்கெட்டுக்கு பங்காற்றுபவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமாகும். அப்படிப்பட்ட ஆல் டைம் கிரேட் ஜாம்பவான்கள் பட்டியலில் உங்களுடைய பெயரும் நினைவில் இருப்பது ஒரு அற்புதமான உணர்வு”

இதையும் படிங்க: வெறும் 29 வயதில் ஓய்வை அறிவித்த வெ.இ சூறாவளி நிக்கோலஸ் பூரான்.. ரசிகர்கள் சோகம்.. காரணம் என்ன?

“அது என்றென்றும் நான் போற்றக்கூடிய ஒன்றாக இருக்கும்” என்று கூறினார். அவருடன் சேர்ந்து தென்னாபிரிக்க ஜாம்பவான்கள் ஹாசிம் அம்லா, கிரேம் ஸ்மித் ஆகியோரும் இந்த கௌரவத்தை பெற்றுள்ளார்கள். மேலும் ஆஸ்திரேலியாவின் மேத்தியூ ஹைடன், நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி ஆகியோருக்கும் இந்த கௌரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement