- Advertisement -
ஐ.பி.எல்

எப்போவும் இந்திய நாடு தான் முக்கியம்.. ஸ்கூல் குழந்தை மாதிரி அது வரை விளையாடுவேன்.. ஓய்வு பற்றி தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச போட்டிகளில் விடை பெற்றார். 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்த அவர் வரலாற்றின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். அதே போல ஐந்து ஐபிஎல் கோப்பைகளையும் வென்ற அவர் மகத்தான கேப்டன்களில் முதன்மையானவராக அறியப்படுகிறார்.

இருப்பினும் 42 வயதாகும் அவர் முன்பு போல் விளையாட முடியாததால் வருங்காலத்தில் கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் பேட்டிங்கில் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே விளையாடும் தோனி விரைவில் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமக்கு எப்பவுமே இந்திய அணி தான் மிகவும் முக்கியம் என்று தோனி கூறியுள்ளார்.

- Advertisement -

நாடு தான் முக்கியம்:

நாட்டுக்காக 2019இல் விளையாடி முடித்த தாம் தற்போது குழந்தை பருவத்தில் கிரிக்கெட்டை விளையாடத் துவங்கிய காலங்களை நினைத்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதாக தோனி தெரிவித்துள்ளார். எனவே இன்னும் ஓரிரு வருடங்கள் விளையாடும் வரை மகிழ்ச்சியுடன் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதாகவும் தோனி கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“2019இல் நான் ஓய்வு பெற்று சில காலம் ஆகிவிட்டது. இப்போது என்னால் முடியும் வரை கிரிக்கெட்டில் மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன். இன்னும் சில வருடங்கள் என்னால் விளையாட முடியும் என்பது உங்களுக்குத் தெரியும். குழந்தையாக பள்ளிக்கூடத்தில் விளையாடியது போல் நான் விளையாட விரும்புகிறேன். இளம் வயதில் காலணியில் இருக்கும் போது மாலை 4 மணி விளையாடுவதற்கான நேரம்”

- Advertisement -

ஓய்வுக்கான நேரம்:

“அப்போது நாங்கள் விளையாடச் சென்று குறிப்பிட்ட நேரத்தை விட அதிகமாக கிரிக்கெட்டில் விளையாடுவோம். அதற்கு வானிலை ஒத்துழைக்காவிட்டால் கால்பந்து விளையாடுவோம். அதே போன்ற அப்பாவித்தனமான கிரிக்கெட்டை நான் விளையாட விரும்புகிறேன். ஆனால் அது சொல்வதை விட கடினம். ஒரு வீரராக நான் எப்போதும் இந்திய அணிக்காக நன்றாக விளையாடவே விரும்பினேன். ஏனெனில் கடந்த காலங்களில் சொன்னது போல் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை”

இதையும் படிங்க: இன்னும் 1980 ஆமை மாதிரியே நகர்ந்தா எப்படி? பாகிஸ்தானை வீழ்த்திய பாபாரை விமர்சித்த கைப், அஸ்வின்

“பெரிய தொடரில் அல்லது வெளிநாடுகளில் நாட்டுக்காக பெரியளவில் சாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். எனவே நாட்டுக்காக அசத்துவதே எனக்கு முதலில் முக்கியம். அதற்கு உங்களுக்கு எது சிறந்த வழி என்பதை கண்டறிய வேண்டும். எனக்கு கிரிக்கெட் மட்டுமே அனைத்துமாக இருந்தது. அதற்காக எப்போது தூங்குவது, எழுந்திருப்பது, என்ன தாக்கத்தை ஏற்படுத்துவது போன்ற விஷயங்கள் முக்கியம். அவற்றை செய்தால் வீரர்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியான விஷயங்கள் பின்னர் அமையும்” எனக் கூறினார்.

- Advertisement -