என் பாசமான ரசிகர்களுக்காக 2026இல் விளையாடுவேனா தெரியல.. 43 வயதில் அதை பாக்கனும்.. தோனி பேட்டி

Ms dhoni 2026
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே ஏழாம் தேதி நடைபெற்ற 57வது போட்டியில் கொல்கத்தாவை 2 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா கேப்டன் ரகானே 48, மணிஷ் பாண்டே 38*, ரசல் 38 ரன்கள் எடுத்த உதவியுடன் 180 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. சென்னைக்கு அதிகபட்சமாக நூர் அஹ்மத் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதைத் துரத்திய சென்னைக்கு உர்வில் படேல் அடித்து நொறுக்கி 31 (11) ரன்கள் எடுத்தார். ஆனால் ஆயுஷ் மாத்ரே 0, கான்வே 0, அஸ்வின் 8, ஜடேஜா 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்ததால் 60/5 என ஆரம்பத்திலேயே சென்னை தடுமாறியது. அப்போது அடித்து நொறுக்கிய இளம் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் 52 (25) ரன்கள் விளாசி போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார்.

- Advertisement -

ரசிகர்களின் பாச மழை:

அதை வீணடிக்காமல் சிவம் துபே 45*, தோனி 17*, கம்போஜ் 4* ரன்களை அடித்து கடைசி ஓவரில் சென்னைக்கு 3வது வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். கொல்கத்தாவுக்கு வைபவ் அரோரா 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

ஆனால் அதை கொல்கத்தாவா? சென்னையா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஏராளமான ரசிகர்கள் தோனிக்காக மஞ்சள் ஜெர்சியை அணிந்து வந்து சென்னை அணிக்கு பெரிய ஆதரவு கொடுத்தனர். மேலும் முக்கியமான சமயங்களில் “சிஎஸ்கே சிஎஸ்கே” என்று அவர்கள் முழங்கியது கொல்கத்தா அணியை ஆச்சரியப்படுத்தியது. அப்படிப்பட்ட ரசிகர்களுக்காக அடுத்த வருடம் விளையாடுவீர்களா? என்று போட்டியின் முடிவில் தோனியிடம் கேட்கப்பட்டது.

- Advertisement -

தோனி நெகிழ்ச்சி:

அதற்கு அவர் கொடுத்த நெகிழ்ச்சியான பதில் பின்வருமாறு. “தொடர் முழுவதுமே ரசிகர்களின் அன்பு மற்றும் பாசம் எனக்கு கிடைத்து வருகிறது. இருப்பினும் 43 வயதாகும் நான் நீண்ட காலம் விளையாடி வருகிறேன் என்பதை மறந்து விடக்கூடாது. ரசிகர்களுக்கு அடுத்த வருடம் நான் விளையாடுவேனா இல்லையா என்பது தெரியாது”

இதையும் படிங்க: ப்ரேவிஸ்க்கு நன்றி.. சிஎஸ்கே வெற்றிக்கு அந்த 2 பேர் காரணம்.. 2026க்கு இந்த திட்டத்தை உருவாக்குறோம்.. தோனி பேட்டி

“உண்மையில் நான் வருடத்திற்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். அதனால் ஐபிஎல் முடிந்த பின் மீண்டும் விளையாட விரும்பினால் அதற்கு நான் அடுத்த 6 – 8 மாதங்கள் கடினமாக உழைக்க வேண்டும். இது போன்ற அழுத்தத்தை இந்த வயதிலும் எனது உடல் தாங்குமா? என்பதைப் பார்க்க வேண்டும். எனவே ஓய்வு பற்றி எதையும் தற்போது முடிவெடுக்கவில்லை. ஆனால் அனைத்து புறங்களிலும் எனக்கு ரசிகர்களிடம் கிடைக்கும் அன்பு மற்றும் பாசம் சிறந்தது” எனக் கூறினார்.

Advertisement