அடுத்த 5 ஐபிஎல் தொடரில் விளையாட ஆசை தான் ஆனா.. சிஎஸ்கே ஓட்டைகளை அங்க அடைப்போம்.. தோனி பேட்டி

MS Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்.எஸ். தோனி 2019 உலகக் கோப்பையுடன் சர்வதேச அரங்கில் ஓய்வு பெற்றார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வரும் அவர் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனைப் படைத்தார். சமீப காலங்களாக முழங்கால் வலியால் அவதிப்பட்டும் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால் பெரியளவில் பேட்டிங் செய்ய வருவதில்லை.

கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே களமிறங்கும் தோனி அதிரடியாக பேட்டிங் செய்யவும் தடுமாறுகிறார். அதனால் எப்போது வேண்டுமானாலும் தோனி ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெறலாம் என்ற நிலைமையில் இருக்கிறார். அதன் காரணமாக அடுத்த 2026 ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

- Advertisement -

5 வருஷம் விளையாட ஆசை:

இதற்கிடையே கடந்த ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் காயத்தால் வெளியேறினார். அதன் காரணமாக மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்ற தோனி தலைமையில் மிகவும் சுமாராக விளையாடிய சிஎஸ்கே வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து மோசமான சாதனை படைத்தது. இந்நிலையில் அடுத்த 5 தொடரில் விளையாட விருப்பம் இருந்தாலும் தம்முடைய உடல் ஒத்துழைத்தால் மட்டுமே விளையாடுவேன் என்று தோனி கூறியுள்ளார்.

மேலும் சிஎஸ்கே அணியில் உள்ள சில ஓட்டைகளை 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் தரமான வீரர்களை வாங்கி அடைப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அடுத்த 5 வருடங்கள் என்னால் கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்பதற்கான மதிப்பீட்டுக் குறியை நான் இப்போது தான் பெற்றேன்”

- Advertisement -

சிஎஸ்கே கம்பேக் கொடுக்கும்:

“குறிப்பாக கண் பார்வைக்கு மருத்துவர் தெளிவான பரிந்துரை கொடுத்துள்ளார். இருப்பினும் என்னுடைய உடலுக்கு தேவையான அனுமதியை மருத்துவர் கொடுக்கவில்லை. எனவே என்னால் கண்களால் மட்டும் கிரிக்கெட்டை விளையாட முடியாது. எங்களுடைய பேட்டிங் வரிசையைப் பற்றி நாங்கள் கொஞ்சம் கவலையில் இருக்கிறோம். ருதுராஜ் காயத்திலிருந்து மீண்டு வரும் போது அது கொஞ்சம் நன்றாக மாறும்”

இதையும் படிங்க: ஷிகர் தவான், கவுதம் கம்பீர் கூட செய்யாத சம்பவத்தை இங்கிலாந்து மண்ணில் செய்த ஆகாஷ் தீப் – விவரம் இதோ

“2025 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே மந்தமாக இருந்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் அடைப்பதற்கு சில ஓட்டைகள் இருந்தன. டிசம்பரில் சிறிய ஏலம் வருகிறது. அதில் எங்களுடைய அணியில் இருக்கும் சில ஓட்டைகளை அடைக்க முயற்சி செய்வோம். கடந்த சில வருடங்களாக எங்களுக்கு நன்றாக அமையவில்லை. நாங்கள் சராசரிக்கு நிகராக செயல்படவில்லை. அதிலிருந்து பாடங்களை கற்றுள்ள நாங்கள் எது தவறாக சென்றது? என்று பார்க்கிறோம். அதை கண்டறிந்துள்ள நாங்கள் தீர்வுகளை உருவாக்கி வருகிறோம்” என்று கூறினார்.

Advertisement