அவர் ஃபைட்டர் இவர் எனர்ஜி ஹிட்டர்.. தோத்தாலும் வருங்கால சிஎஸ்கே சொத்தா இருப்பாரு.. தோனி பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 49வது போட்டி நடைபெற்றது. அதில் பஞ்சாப் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த சென்னை தொடரிலிருந்து வெளியேறியது. ஏனெனில் 10 போட்டிகளில் 8வது தோல்வியை சந்தித்த சென்னை 2020, 2022, 2024க்குப்பின் 4வது முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாமல் வெளியேறியது.

அப்போட்டியில் முதலில் விளையாடிய சென்னை முதல் முறையாக அதிரடியாக விளையாட முயற்சித்த போதிலும் 19.2 ஓவரில் 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஷாம் கரன் 88, தேவால்ட் ப்ரேவிஸ் 32 ரன்கள் அடித்தார்கள். அதிகபட்சமாக சஹால் ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

வெளியேறிய சென்னை:

அடுத்ததாக 191 ரன்களை துரத்திய பஞ்சாப் அணியை பிரப்சிம்ரன் சிங் 54, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 72 ரன்கள் அடித்து 19.4 ஓவரில் வெற்றி பெற வைத்தனர். அதையும் சேர்த்து 6வது வெற்றியைப் பெற்ற பஞ்சாப் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. சென்னைக்கு அதிகபட்சமாக பதிரனா, கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் 8வது தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இதையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக (2024, 2025) அடுத்தடுத்த தொடர்களில் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாமல் சிஎஸ்கே பரிதாபமாக வெளியேறியுள்ளது. இந்நிலையில் இந்தப் போட்டியில் கடைசி ஓவரை முழுமையாக விளையாடாததே தோல்விக்கு காரணம் என்று தோனி கூறியுள்ளார். மேலும் சாம் கரண் போராட்டக்காரர் என்று பாராட்டிய தோனி தேவால்ட் ப்ரேவிஸ் சிஎஸ்கே அணியின் வருங்கால சொத்தாக இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

தோனி பாராட்டு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் முதல் முறையாக இந்த வருடத்தில் நாங்கள் இப்போட்டியில் போதுமான ரன்கள் அடித்தோம். ஆனால் அது சராசரி ஸ்கோரா? நாங்கள் கடைசி 4 பந்துகளை அடிக்கவில்லை. அதற்கு முந்தைய ஓவரில் 4 விக்கெட்டுகள் இழந்தோம். இப்படிப்பட்ட நெருக்கமான போட்டிகளில் அந்த 7 பந்துகள் தோல்வியை சந்திக்க அதிகமானது”

இதையும் படிங்க: 5க்கு 5.. நாக் அவுட் செய்த பஞ்சாப்.. சிஎஸ்கே 2008 – 2024 ஐபிஎல் வரலாறு காணாத 3 மோசமான சாதனை தோல்வி

“கரண் – ப்ரேவிஸ் பார்ட்னர்ஷிப் அற்புதமானது. சாம் ஃபைட்டர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெற்றிகளில் பங்காற்ற விரும்பும் அவருக்கு துரதிஷ்டவசமாக நாங்கள் முழுமையான வாய்ப்பு கொடுக்க முயற்சித்தோம். இந்த வருட ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் இருந்ததிலேயே இன்றைய பிட்ச் சிறந்தது. 15 எக்ஸ்ட்ரா ரன்கள் எடுக்காததே தோல்விக்கு காரணம். ப்ரேவிஸ் மிகவும் சிறந்த ஃபீல்டர். நல்ல பந்துகளை பவுண்டரியாக அடிக்கும் (ஹிட்டர்) அவர் அணிக்கு எனர்ஜியை கொண்டு வருகிறார். அவர் விளையாடும் விதத்தில் மகிழ்ச்சி. அவர் வருங்காலத்தில் சொத்தாக இருப்பார்” என்று கூறினார்.

Advertisement