MS Dhoni : நாட்டு பற்றை கிரிக்கெட் போட்டியிலும் காண்பித்த தோனி – விவரம் இதோ

உலக கோப்பை தொடரின் எட்டாவது போட்டி நேற்று முன்தினம் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கும், டூப்ளிஸிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க

dhonii
- Advertisement -

உலக கோப்பை தொடரின் எட்டாவது போட்டி நேற்று முன்தினம் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கும், டூப்ளிஸிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிக்கும் இடையே நடைபெற்றது.

ind vs sa

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கை விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்தது அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 42 ரன்களும் கேப்டன் டூபிளிஸ்சிஸ் 38 ரன்களும் எடுத்தனர். இந்தியாவின் சார்பாக சாஹல் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் ரோகித் சர்மா 122 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

rohith

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான தோனி நாட்டின் மீது வைத்திருக்கும் பற்றை வெளிப்படுத்தும் விதமாக ஒரு செயலை செய்துள்ளார். இது சமூக வலைதளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அது யாதெனில் இது வழக்கமாக விக்கெட் கீப்பிங் செய்யும் தோனி தற்போது பயன்படுத்தி வரும் கிளவுஸ்களில் இந்திய பாராமிலிட்டரியின் சிறப்புப் படையின் முத்திரையான பாலிதான் என்பதனை பதித்து தனது விக்கெட் கீப்பிங் பிளவுசை பயன்படுத்தி வருகிறார்.

dhoni

ஏற்கனவே 2011ஆம் ஆண்டு தோனிக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் பாலிதான் முத்திரையை பயன்படுத்தி விளையாடி வருவதால் அவர் இந்திய ராணுவத்தின் மீது எவ்வளவு அக்கறை ஆக உள்ளார் என்பது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தோனியின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் வரவேற்பினை பெற்றுவருகிறது.

Advertisement