பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதோடு இந்த தொடருக்கான எதிர்பார்ப்பையும் எகிறவைத்துள்ளது.
இந்திய அணியில் தோனிக்கு கிடைக்கவுள்ள பதவி :
இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேச அணிகளும், “பி” பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் பங்கேற்றுள்ளன.
குரூப் பிரிவில் இடம் பிடித்துள்ள அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். பின்னர் ஒவ்வொரு பிரிவிலும் முதல இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் வரும் ஜனவரி 12-ஆம் தேதிக்குள் அறிவிக்கப்பட வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் இந்த வீரர்களின் தேர்வில் மாற்றம் ஏதும் இருந்தால் பிப்ரவரி 12-ம் தேதிக்குள் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தலைமையில் பிசிசிஐ 12-ஆம் தேதி அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் சில முக்கிய நடவடிக்கைகள் இந்த தொடருக்காக மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் கௌதம் கம்பீர் புதிய தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்ற பின்னர் இந்திய அணி சற்று பின்னடைவை சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க : முகமது ஷமி மட்டுமல்ல.. மற்றொரு முன்னணி வீரரும் சாம்பியன்ஸ் டிராபிக்கு திரும்புகிறார் – விவரம் இதோ
இவ்வேளையில் தோனி மீண்டும் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் போது ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருக்கும்போது தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அதனை தொடர்ந்து தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தோனி மீண்டும் ஆலோசகராக பதவி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



