ஐ.பி.எல் வரலாற்றில் ரெய்னா வைத்திருக்கும் மிகப்பெரிய சாதனையை தகர்க்கவுள்ள தோனி – விவரம் இதோ

- Advertisement -

சுரேஷ் ரெய்னா மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகிய இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து பத்து வருடங்கள் விளையாடியவர்கள். தோனியை தல என்று அழைத்தால் சுரேஷ் ரெய்னாவை சின்ன தல என்றுதான் மக்கள் அழைத்து வந்தார்கள். அந்த அளவிற்கு இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிகப்பெரிய அங்கமாக இவர்கள் இருவரும் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Raina-2

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பல போட்டிகளை ஒன்றாக நின்று வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வருடம் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட போவதில்லை என்று அறிவித்துவிட்டார் சுரேஷ் ரெய்னா. மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் நடைபெற்றுவந்தன. எப்படி இருந்தாலும் சுரேஷ் ரெய்னா அருகில் இல்லாவிட்டாலும் இந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நன்றாகத்தான் விளையாடும் என்பது போல் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றுவிட்டது.

csk

இந்நிலையில் இந்தத்தொடரில் ஐ.பி.எல் வரலாற்றில் சுரேஷ் ரெய்னா வைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய சாதனையை இந்தத்தொடரில் தோனி முறியடிக்க காத்திருக்கிறார். அதுயாதெனில் ஐ.பி.எல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்னும் பெருமையை வைத்துள்ளார் சுரேஷ் ரெய்னா. மொத்தம் 193 போட்டிகளில் அவர் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்று விளையாடி இருக்கிறார்.

raina

அதற்கு அடுத்ததாக தோனி 190 போட்டிகளில் ஆடி இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்த வருடம் சுரேஷ் ரெய்னா ஆடமாட்டார். இதன் காரணமாக இன்னும் நான்கு போட்டிகளில் இந்த சாதனையை தோனி எடுத்து விடுவார். அநேகமாக சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி இந்த சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement