சர்வதேச கிரிக்கெட்டில் ரிட்டயர்டு ஆயும் தோனிக்கு ஐ.பி.எல் தொடரில் இவ்வளவு சம்பளமா ? – விவரம் இதோ

Dhoni

இந்திய அணியின் கேப்டன் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தோனி இதன் பிறகு கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது ஐபிஎல் தொடரும் முடிந்துள்ள நிலையில் தோனி தனது பண்ணை வீட்டில் விவசாயம் மேற்கொண்டு வருகிறார். அது மட்டுமின்றி தனது பண்ணை வீட்டில் விளைச்சல் கொடுத்த காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

Dhoni

இதைத் தவிர்த்து தோனி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தற்போது தோனியும் அவரது மகள் ஜீவாவும் இணைந்து கேட்பரி ஓரியோ பிஸ்கட் விளம்பரத்தில் நடித்து இருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தோனியின் மொத்த ஐபிஎல் சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. தல தோனி 2008 ஐபிஎல் தொடக்க காலத்திலிருந்தே சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.

தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 3 முறை ஐபிஎல் கோப்பையை பெற்று கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து ஆண்டுகளும் தவறாமல் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். ஆனால் கடந்த 13 வது சீசனில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே வெறியேறியது.

Dhoni

கடந்த ஐபிஎல் தொடரின் இறுதியில் நான் 2021ல் நடைபெறும் 14 வது ஐபிஎல் சீசனில் கண்டிப்பாக விளையாடுவேன் என்று தோனி கூறியிருந்தது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த 2021 ஐபிஎல் சீசனில் தோனிக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தோனி இதுவரை விளையாடிய அனைத்து ஐபிஎல் தொடரையும் மொத்தமாக சேர்த்து பார்க்கையில் 137.8 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

- Advertisement -

2021 ஐபிஎல் சீசனில் தோனி பெரும் 15 கோடி ரூபாயும் சேர்த்து பார்த்தால் 152.8 கோடி ரூபாய் சம்பளம் பெறுவார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் பெற்ற வீரராக தோனி இருக்கிறார். தோனியை தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலியும் இருக்கின்றனர்.