- Advertisement -
ஐ.பி.எல்

அன் கேப்டு வீரராக தோனி தக்கவைக்கப்பட்டால் அவர் வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – விவரம் இதோ

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி முழுநேர விக்கெட் கீப்பர் பேஸ்ட்மேனாக இந்த தொடரில் விளையாடியிருந்தார். தற்போது 43 வயதான தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் இருந்த வேளையில் அடுத்த ஆண்டு தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு தோனியின் சம்பளம் எவ்வளவு :

ஏனெனில் பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய விதிமுறை பட்டியலில் அன் கேப்டு வீரராக ஓய்வு பெற்று 5 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வீரர்கள் விளையாடலாம் என்று அறிவித்துள்ளதால் தோனி அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி ருதுராஜ் கெய்க்வாட்டை புதிய கேப்டனாக அறிவித்தார். அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டும் அவர் ரசிகர்களின் அன்பிற்காகவும், எதிர்பார்ப்புக்காகவும் விளையாடுவார் என்று தெரிகிறது. டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மெகா ஏலத்திற்கு முன்னதாக ஆறு வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதன்காரணமாக நிச்சயம் தோனி 6 வீரர்களில் ஒருவராக சென்னை அணியில் தக்கவைக்கப்படுவார் என்பது உறுதி. அதே வேளையில் தற்போது 12 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வரும் தோனி அன் கேப்டு வீரராக தக்க வைக்கப்படும் பட்சத்தில் எவ்வளவு சம்பளம் வாங்குவார்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் 2023-ஆம் ஆண்டு கணக்கின்படி 12 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய தோனி அடுத்த ஆண்டு அன் கேப்டு வீரராக தக்கவைக்கப்படும் பட்சத்தில் அவரது சம்பளத்தில் இருந்து 66.67% சம்பளம் குறைக்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் 12 கோடி சம்பளமாக பெற்று வந்த அவர் அடுத்த ஆண்டு நான்கு கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் 2025 : சி.எஸ்.கே அணி தக்கவைக்கப்போகும் 6 வீரர்கள் யார்? – நிர்வாகத்தின் முடிவு என்ன?

இருப்பினும் சென்னை அணிக்காக எதை வேண்டுமானாலும் செய்ய முன்வரும் தோனி இந்த சம்பளத்தை எதிர்பாராமல் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மேலும் ஒரு சீசன் விளையாடுவார் என்று நம்பலாம். சென்னை அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் தலைமையின் கீழ் அந்த அணி இரண்டு ஆண்டுகள் தடைபட்டிருந்த வேளையிலும் ஐந்து முறை கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -