இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
அடிலெய்டில் கோலிக்கு ஸ்டான்ட் வைப்பார்கள் : எம்.எஸ் தோனி பேட்டி
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை அக்டோபர் 23-ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக இவ்விரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தற்போது அடிலெய்டு மைதானத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.
இந்த தொடரில் 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் களத்திற்கு திரும்பி விளையாடி வரும் ரோகித் சர்மா மற்றும் விராத் கோலி ஆகியோரது செயல்பாடு எவ்வாறு இருக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் ரோகித் சர்மா 8 ரன்களும், விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்த வேளையில் இரண்டாவது போட்டியின் போது அவர்களது ஆட்டம் எவ்வாறு இருக்கப் போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக கடந்த போட்டியில் டக் அவுட்டான விராத் கோலி நிச்சயம் அடிலெய்டு மைதானத்தில் சிறப்பான கம்பேக் கொடுப்பார் என்று பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் விராட் கோலியை பொருத்தவரை எப்போதுமே அடிலெய்டு மைதானத்தில் சிறப்பாக விளையாடியுள்ளார். கடந்த காலங்களில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மட்டும் இதுவரை அனைத்து வடிவிலும் சேர்த்து 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் ஐந்து சதம் மற்றும் நான்கு அரைசதம் என 975 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.
இதனால் நிச்சயம் அடுத்த போட்டியில் அடிலெய்டு மைதானத்தில் விராட் கோலி பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அடிலெய்டு மைதானத்தில் எப்போதுமே சிறப்பாக விளையாடும் விராட் கோலி குறித்து ஏற்கனவே முன்னாள் இந்திய கேப்டன் தோனி அளித்திருந்த ஒரு பழைய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தோனி கூறியதாவது :
இதையும் படிங்க : இன்னும் 2 சிக்ஸர்கள் தான் தேவை.. யுவ்ராஜ் சிங்கை பின்னுக்கு தள்ளி விராட் கோலி – நிகழ்த்தப்போகும் சாதனை
அடிலெய்டில் விராட் கோலி எடுக்கும் ரன்களின் எண்ணிக்கையை பொறுத்து நிச்சயம் ஒரு ஸ்டாண்டிற்கு அவரது பெயரை வைப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு அவர் அடிலெய்டு மைதானத்தில் ஆதிக்கத்தை செலுத்தி விளையாடி வருகிறார். அவர் தனது வாழ்க்கையை முடிக்கும் போது பல ஆஸ்திரேலியா மைதானங்களில் அவருக்கு ஸ்டாண்ட் இருக்கும் என தோனி புகழாரம் சூட்டியிருந்தார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



