பாசத்தை மறக்காத தல, தமிழ்நாட்டில் பள்ளியை துவங்கிய தோனி – எந்த ஊர், முழுவிவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்து கிரிக்கெட்டின் மீது இருந்த காதலால் ரயில்வே வேலையையும் உதறிவிட்டு நாட்டுக்காக விளையாட துவங்கினார். முன்னாள் கேப்டன் கங்குலியின் மாணவனாக 2004இல் அறிமுகமான அவர் மின்னல் வேகத்தில் விக்கெட் கீப்பிங் செய்ததுடன் நிறைய போட்டிகளில் அதிரடியாக விளையாடி இந்திய விக்கெட் கீப்பர்கள் என்றால் பந்து பிடித்த போடுபவர்களாக மட்டுமல்லாமல் அதிரடியாக பேட்டிங் செய்ய வேண்டும் என்ற அடிப்படை இலக்கணத்தை மாற்றினார். மேலும் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதிவியில் தைரியமான முடிவுகளை எடுத்து அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழிநடத்திய அவர் 2007 டி20 உலகக்கோப்பையை வென்று 2010இல் இந்தியாவை டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியாக தரம் உயர்த்தினார்.

அத்துடன் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து 28 வருடங்கள் கழித்து 2011இல் சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்று ரசிகர்களின் தாகத்தை தணித்த அவர் 2013இல் தாம் உருவாக்கிய விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற இளம் வீரர்களை வைத்து சாம்பியன்ஸ் ட்ராபி வென்று தன்னை மிகச்சிறந்த கேப்டனாக நிரூபித்தார். அப்படி கீப்பர், பினிஷர், 3 விதமான உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன், தற்போதைய இந்திய அணியில் விளையாடும் 70%க்கும் மேற்பட்ட வீரர்களை வாய்ப்பளித்து வளர்த்து வருங்காலத்தை சிறப்பாக கட்டமைத்த தலைவன் போன்ற பன்முக பரிணாமங்களை கொண்ட தோனி ராஞ்சியில் பிறந்தாலும் தமிழகத்தின் மீது எப்போதும் தனி பாசம் கொண்டவர்.

- Advertisement -

தமிழகத்தின் தல:
ஏனெனில் 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது மும்பைக்கு சச்சின் கொல்கத்தாவுக்கு கங்குலி போன்ற நட்சத்திரங்கள் இல்லாத சென்னைக்கு கேப்டனாக பொறுப்பேற்ற அவர் ஏறக்குறைய அனைத்து சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு சென்று 4 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று கொடுத்துள்ளார். அந்த வகையில் சென்னையை தன்னுடைய 2வது வீடாக கருதும் அவரை தமிழக ரசிகர்கள் தல என்றழைத்துக் கொண்டாடுகிறார்கள்.

அவர்கள் மீது வைத்துள்ள பாசம் காரணமாகவே தன்னுடைய வாழ்நாளின் கடைசி போட்டி சென்னை மண்ணில் நடைபெறும் என்று அறிவித்துள்ள தோனி தமிழ்நாட்டின் மீது எப்போதும் தனி அன்பு கொண்டுள்ளார். இந்நிலையில் கிரிக்கெட்டின் மீது ஆர்வமுள்ள தமிழக சிறுவர்கள், இளைஞர்கள் நவீன வசதிகளுடன் பயிற்சிகளை பெற்று வருங்காலங்களில் பெரிய அளவில் விளையாடுவதற்காக சிஎஸ்கே நிர்வாகம் சென்னை மற்றும் சேலத்தில் ஏற்கனவே 2 அகாடமியை தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் சென்னை நிர்வாகத்துடன் இணைந்துள்ள எம்எஸ் தோனி ஓசூரில் முதல் முறையாக முழுநேர கிரிக்கெட் பயிற்சி பள்ளியை துவங்கியுள்ளார்.

- Advertisement -

“எம்எஸ் தோனி குளோபல் ஸ்கூல்” என்ற பெயருடன் 4 – 5 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த பள்ளியில் பயிற்சி செய்வதற்கும் விளையாடுவதற்கும் 8 பிட்ச்கள் கொண்ட மைதானமும் நவீன கிரிக்கெட் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சொல்லப்போனால் இந்தியாவிலேயே இது 3வது மிகப்பெரிய கிரிக்கெட் பள்ளியாகும். அவர் நினைத்திருந்தால் இதை வடமாநிலங்களில் துவக்கியிருக்கலாம். ஆனாலும் தமிழகம் மீதுள்ள அன்பில் சென்னை அணியுடன் இணைந்து ஓசூரில் துவக்கியுள்ள அவர் அக்டோபர் 10ஆம் தேதியன்று அதை நேரடியாக வந்து திறந்து வைத்தார்.

அதன்பின் அவர் பேசியது பின்வருமாறு. “பள்ளிகளுக்கு செல்லும் போதெல்லாம் என்னுடைய காலத்தில் பள்ளியில் நேரங்களை செலவிட்டது எனக்கு நினைவுக்கு வரும். பள்ளியில் இருப்பதை வாழ்வின் மிகச் சிறந்த நேரமாக நான் எப்போதும் நம்புவேன். அங்கே படிப்பு, விளையாட்டு என எதுவாக இருந்தாலும் அது உங்களது வாழ்வில் மீண்டும் வரவே வராது. உங்களுக்கு அங்கு மறக்க முடியாத நல்ல நினைவுகள் கிடைக்கும். அங்கு நீங்கள் நல்ல நண்பர்களை உருவாக்கிக் நீண்டகாலம் நட்பில் இருப்பீர்கள்”

“ஆனால் பள்ளி முடிந்து பொறுப்புகளை நீங்கள் ஏற்கும்போது உங்களுடைய சிறுசிறு குணங்களையும் நீங்கள் பலமாக மாற்ற வேண்டும். கட்டுக் கோப்பு, நன்னடத்தையாக இருப்பதுடன் இளம் மற்றும் மூத்த ஆசிரியர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும். அந்த நல்ல குணங்கள் உங்களுடன் கடைசிவரை இருக்கும். அதே போல் இங்கும் நல்ல குணங்களை கற்று கிடைக்கும் வசதிகளை பயன்படுத்தி நீங்கள் பெரிய அளவில் வரவேண்டும்” என்று மாணவர்களிடையே கூறினார்.

Advertisement