துபாயிலும் சிக்ஸர்களை பறக்கவிட்ட தல தோனி. இந்த வருஷம் அதிரடி கன்பார்ம் – சி.எஸ்.கே வெளியிட்ட வீடியோ

Dhoni

இந்த வருட ஐபிஎல் தொடர் குறித்த தகவல் வெளியானதிலிருந்து சிஎஸ்கே அணிக்கு பல அடுத்தடுத்த சிக்கல்கள் ஏற்பட்டன. முதலில் தோனி, ரெய்னா ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தனர். அதன்பிறகு துபாய் வந்த சிஎஸ்கே அணியில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்துதல் நீட்டிக்கப்பட்டது இந்த விவகாரம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

Raina

மேலும் அதற்கு மேல் அதிர்ச்சியாக ரெய்னா சிஎஸ்கே அணியுடனான மனக்கசப்பு காரணமாக இத் தொடரில் இருந்து வெளியேறினார். இப்படி அடுத்தடுத்த சிக்கல்களால் சிஎஸ்கே அணி தவித்து வருகிறது. இருப்பினும் சிஎஸ்கே ரசிகர்கள் எப்போதும் போல சென்னை அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்து வருகின்றனர்.

துபாய் கிளம்பும் முன் சென்னையில் பயிற்சி செய்த தோனி வலைப்பயிற்சியின் போது அபார சிக்ஸர்களை பறக்க விட்டு தனது ஆட்டம் இவ்வாறு தான் இருக்கப்போகிறது என்பதை காண்பித்தார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதால் அவர் இந்த வருடம் அதிரடியில் அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

raina

மேலும் ரெய்னா விட்டுச்சென்ற இடத்தை அவர் நிரப்ப வேண்டும் என்று ரெய்னா கேட்டுக் கொண்டதால் அவர் மூன்றாவது இடத்தில் இறங்கி அதிரடி காட்டுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது துபாய் வலைப்பயிற்சியிலும் தோனி சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார். இந்த வீடியோவை சிஎஸ்கே அணி தனது ட்விட்டர் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டுள்ளது.

- Advertisement -

 

View this post on Instagram

 

A post shared by Chennai Super Kings (@chennaiipl) on

சென்னை அணியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் மற்ற அணிகளை விட நான்கு நாட்கள் கழித்து நேற்று தான் சிஎஸ்கே தனது பயிற்சியை தாமதமாக துவங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சியில் அனைத்து சி.எஸ்.கே வீரர்களும் கலந்துகொண்டு பயிற்சியினை மேற்கொண்டனர்.