மைதானத்தை விட்டு வெளியே மெயின் ரோட்டுக்கு இமாலய சிக்ஸ் அடித்த தல தோனி

Dhoni-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி வழக்கம் போலவே முதலில் பந்து வீச்சை தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 216 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 32 பந்துகளில் 74 ரன்களில் (9 சிக்ஸர் 1 பவுண்டரி) , ஸ்டீவ் ஸ்மித் 47 பந்துகளில் 69 ரன்களும் (4 சிக்ஸர் 4 பவுண்டரி) குவித்தனர். அதற்கடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர மற்ற யாரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை.

- Advertisement -

37 பந்துகளை சந்தித்த டூபிளெஸ்ஸிஸ் 7 சிக்சர் ஒரு பவுண்டரி என 72 ரன்கள் குவித்தார். துவக்க வீரர் வாட்சன் 33 ரன்களும், இறுதி நேரத்தில் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசிய தோனி 29 ரன்களும் குவித்தனர். இதனால் சென்னை அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி 217 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை நோக்கி விளையாடியபோது தோனி ஏழாவது வீரராக களமிறங்கி 13 பந்துகள் வரை பவுண்டரிகள் எதுவும் அடிக்காமல் ரசிகர்களை ஏமாற்றினார். ஆனால் இறுதியில் கடைசி ஓவரில் தோனி 3 சிக்சர்களை தொடர்ச்சியாக அடித்து சற்று ஆறுதல் அளித்தார். 17 பந்துகளை பிடித்து தோனி 29 ரன்களை குவித்தார்.

மேலும் இதில் இறுதி ஓவரில் தோனி அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தை விட்டு வெளியே சென்று மெயின் ரோட்டில் விழுந்தது. அந்தப் பந்து ரோட்டில் விழுந்ததும் அதனை கண்ட ரசிகர் ஒருவர் டோனி அடித்த அந்த பந்தை எடுத்துச் சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement