- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனியை ஓய்வுக்கு வற்புறுத்துறாங்க. ஆனா தோனி விக்கெட் கீப்பிங்கில் வைத்திருக்கும் சாதனையை பற்றி தெரியுமா ? – விவரம் இதோ

சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு அணிக்கும் ஒரு சிறப்பான விக்கெட் கீப்பர் இருப்பார்கள். அந்த வகையில் தோனி போன்ற ஒரு மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் இந்தியாவிற்கு கிடைத்தது அதிர்ஷ்டம் தான். இக்கட்டான பல சூழ்நிலைகளில் அசத்தலாக ஒரு ஸ்டம்பிங் செய்து அணியை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து வந்ததை பலமுறை நாம் பார்த்திருப்போம். அப்படி அதிக ஸ்டம்பிங் செய்த சர்வதேச விக்கெட் கீப்பர்கள் பற்றி தற்போது பார்ப்போம்.

ஆடம் கில்கிறிஸ்ட் – ஆஸ்திரேலியா – 55 ஸ்டம்பிங் :

ஆஸ்திரேலிய அணியின் இடதுகை ஆட்டக்காரர் இவர் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஸ்டம்பிங் செய்த வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார். மொத்தம் 417 கேட்சுகளும் 55 ஸ்டம்பிங்கும் செய்து அசத்தியிருக்கிறார். 472 விக்கெட்டுகள் எடுப்பதற்கு காரணமாக இருந்துள்ளார்.

மொய்ன் கான் – பாகிஸ்தான் – 73 ஸ்டம்பிங் :

பாகிஸ்தான் அணிக்காக 1990 முதல் 2004ஆம் ஆண்டு வரை விளையாடியவர். இவர் பல சுழற்பந்து வீச்சாளர்களை எளிதாக சமாளித்தவர். மொத்தம் 216 கேட்சுகள் மற்றும் 73 ஸ்டம்பிங் செய்து 287 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்துள்ளார். இதன்மூலம் இந்த பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

ரோமேஷ் கலுவிதரனா – இலங்கை – 75 ஸ்டம்பிங் :

இலங்கை கிரிக்கெட் வாரியம் உருவாக்கிய மிகச் சிறந்த விக்கெட் கீப்பர்களில் இவரும் ஒருவர். 1990 முதல் 2004ம் ஆண்டு வரை இலங்கை அணிக்காக 186 போட்டிகளில் பங்கேற்று 75 ஸ்டம்பிங் செய்துள்ளார். மேலும் 131 கேட்சுகளும் பிடித்துள்ளார். இதன்மூலம் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்

குமார் சங்கக்கார- இலங்கை – 99 ஸ்டம்பிங் :

இலங்கை அணி உருவாக்கிய மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் இவர் ஒருவராக திகழ்ந்தவர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது காலகட்டத்தில் 383 கேட்சுகள் மற்றும் 99 ஸ்டம்பிங் செய்து அசத்தியுள்ளார். இதன்மூலம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் .

மகேந்திரசிங் தோனி – 123 ஸ்டம்பிங் :

கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக இருக்கிறார் என்றால் அவர் இவர்தான். தனது சாமர்த்தியமான பல முடிவுகளால் மிக எளிதாக பேட்ஸ்மேன்களை விக்கெட் கீப்பராக நின்று தூக்கியவர். கடந்த 15 ஆண்டுகளாக விளையாடி 123 ஸ்டம்பிங் செய்து அசத்தியுள்ளார். மேலும் 321 கேட்சுகளும் பிடித்துள்ளார் இதன்மூலம் முதல் இடத்தை பிடிக்கிறார் தோனி.

சமீப காலமாகவே தோனி விரைவில் தானாக முன்வந்து ஓய்வை அறிவிக்க வேண்டும் என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால் தோனி போன்று மீண்டும் ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைப்பது என்பது அரிதான காரியம். மேலும் நிச்சயம் இனி எத்தனை விக்கெட் கீப்பர் இந்திய அணிக்கு கிடைத்தாலும் தோனியின் இடத்தினை யாராலும் நிரப்ப முடியாது என்பதே உண்மை.

தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் வீடியோ இன்றளவும் அதிக கிரிக்கெட் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் எதிரணியின் பேட்ஸ்மேன்களே தோனி ஸ்டம்பிங் செய்வதை பார்த்து திகைத்தபடி வெளியேறியதையும் நாம் பார்த்திருக்கிறோம்.

- Advertisement -
Published by