தோனி இம்முறை ஐ.பி.எல் தொடருக்காக பயன்படுத்த இருக்கும் 3 பேட்கள் இவைதான் – அதன்பின் ஒளிந்திருக்கும் ரகசியம்

Dhoni Bat issue
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வு முடிவை அறிவித்தார். அவர் ஓய்வை அறிவித்து கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகியும் இன்னும் அவர் குறித்த செய்திகள் ஓய்ந்த பாடில்லை. மேலும் ரசிகர்கள் அனைவரும் அவரது ஓய்வு அறிவிப்பினால் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Dhoni-1

- Advertisement -

இருப்பினும் அவர்களுக்கு இருக்கும் தற்போது இருக்கும் ஒரே ஆறுதலான விடயம் யாதெனில் தோனி தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்பது மட்டுமே. இந்நிலையில் தற்போது இந்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்னர் தோனி தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளதால் அவர் சுதந்திரமாக விளையாடுவார் மேலும் அவரது அதிரடி இந்த தொடரில் பிரமாதமாக இருக்கும். எனவே பந்து வீச்சாளர்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பதான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கு தோனி பயன்படுத்த இருக்கும் மூன்று பேட்கள் பற்றிய சுவாரசிய தகவலை இந்த பதிவில் பார்ப்போம். அதன்படி தோனி இந்த ஐபிஎல் தொடரில் BAS, SS, Vampire ஆகிய மூன்று ரக பேட்டுகளை பயன்படுத்தி உள்ளார். அதற்கு காரணம் யாதெனில் தோனி தனது இளம் கிரிக்கெட்டில் முறையான கிரிக்கெட் ஸ்பான்சர் இல்லாமல் தவித்த போது அவருக்கு முதல் முதலில் உதவியர் ஸ்பான்சர் சோமி கோலி.

dhoni bat

தோனியின் நண்பரான பரம்ஜீத் சிங் மூலம் தோனிக்கு அறிமுகமானவர் சோமி கோலி. பரம்ஜீத் சிங்கின் தொடர் வற்புறுத்தலுக்கு பிறகு 6 மாதங்கள் யோசித்து முதல் கிரிக்கெட் கிட்டை தோனிக்கு ஸ்பான்சர் செய்தவர் இவர்தான். ஆரம்ப கட்டத்தில் அவர் கொடுத்த கிரிக்கெட் உபகரணங்களை வைத்தே தோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கினார்.

- Advertisement -

அதன் பின்னர் கிரிக்கெட்டின் உச்சத்தை அடைந்த தோனி பல்வேறு உயரங்களை தொட்டார். அதன்பிறகு தோனி பயன்படுத்திய கிரிக்கெட் லேபிளுக்கு கூட பலகோடி வழங்கப்பட்டது. இந்நிலையில் தனது கிரிக்கெட்டின் கடைசி காலகட்டத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எந்த கட்டணமும் இன்றி தான் ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய அந்நிறுவனங்களின் கிரிக்கெட் உபகரணங்களை தோனி பயன்படுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhoni

ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் அவர் இதே முறையை கையாண்டார். எனவே இந்த ஐபிஎல் தொடரிலும் இந்த மூன்று பேட்டுகளை பயன்படுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது ஆரம்ப காலத்தில் உதவிய சோமி கோலிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தோனி செய்யவிருக்கும் இந்த செயல் நிச்சயம் தோனியின் நற்பண்புகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. இதற்காக தோனியின் ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement