3 மேட்ச்லயே உலககோப்பை சான்ஸ் கொடுத்துட்டாரு, கேப்டன் தோனி பற்றி நெகிழும் நட்சத்திர வீரர்

Hardik-Pandya
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் எம்எஸ் தோனி, ரோகித் சர்மா போன்ற ஜாம்பவான் கேப்டன்கள் தலைமை வகித்த சென்னை, மும்பை போன்ற அணிகளால் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியவில்லை. ஆனால் முதல் வருடத்திலேயே ஹர்திக் பாண்டியா தலைமையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்திய குஜராத் டைட்டன்ஸ் சொந்த மண்ணில் ஒரு லட்சம் ரசிகர்கள் முன்னிலையில் ராஜஸ்தானை தோற்கடித்து கோப்பையை வென்று ஆச்சரியப்படுத்தியது. இத்தனைக்கும் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத பாண்டியா தலைமையில் லீக் சுற்றை தாண்டுமா என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணி முதல் சீசனிலேயே இவ்வளவு பெரிய சாதனை படைத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

Pandya

- Advertisement -

இந்த வெற்றிக்கு ரசித் கான், டேவிட் மில்லர் என முக்கிய நட்சத்திர வீரர்கள் பெரும்பாலான போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டாலும் அவர்களையும் வழிநடத்தி தாமும் ஒரு ஆல்-ரவுண்டராக அசத்திய ஹர்திக் பாண்டியா அந்த அணியின் வெற்றியில் அதிக பங்காற்றியுள்ளார். சமீப காலங்களில் காயத்தால் தடுமாறிய அவர் கேப்டனாக பொறுப்பேற்ற 3-வது இடத்தில் களமிறங்கி 15 போட்டிகளில் 487 ரன்களையும் தேவையான நேரத்தில் பந்துவீசி 8 விக்கெட்டுகளை எடுத்து சிறந்த ஆல்-ரவுண்டராக தரமான கேப்டனாக வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

பலே பாண்டியா:
அதிலும் முக்கியமான இறுதிப்போட்டியில் 3 விக்கெட்டுகளும் 34 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் மீண்டும் இந்திய அணியில் கடந்த 2021 டி20 உலககோப்பைக்கு பின் வலுவான இடத்தைப் பிடித்துள்ளார். அதிலும் கேப்டனாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள இவர் வரும் காலங்களில் இந்திய டி20 அணியை வழிநடத்த கூடியவராக தன்னை நிரூபித்துள்ளார். ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் நவீன கிரிக்கெட்டில் சிறந்த இந்திய ஆல்-ரவுண்டராக வலம் வரும் இவர் கடந்த 2016இல் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் கீழ் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்தார்.

Hardik Pandya MS DHoni GT vs CSK

அந்த ஆரம்ப கட்டத்தில் தடுமாறினாலும் தன் மீது நிறைய நம்பிக்கை வைத்த எம்எஸ் தோனி தமக்கு நிறைய ஆதரவு கொடுத்ததாலேயே இன்று இந்த அளவுக்கு வளர்ந்துள்ளதாக ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். அதைவிட 2016இல் ஆஸ்திரேலிய மண்ணில் நிகழ்ந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அறிமுகமாகி சுமாராக செயல்பட்ட தமக்கு அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் எந்தவித தயக்கமும் இல்லாமல் எம்எஸ் தோனி வாய்ப்பளித்ததாக வியப்புடன் பாண்டியா தெரிவிக்கிறார்.

- Advertisement -

3 போட்டியில் வாய்ப்பு:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் இந்திய அணியில் சேர்ந்தபோது சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், எம்எஸ் தோனி, விராட் கோலி, ஆசிஸ் நெஹ்ரா என அனைவருமே வளர்ந்தவர்களாக இருந்தனர். இந்தியாவிற்கு விளையாடாத முன்பே அவர்கள் நட்சத்திரங்களாக வளர்ந்து விட்டனர். எனவே அவர்களுடன் விளையாடியது எனக்கு பெரிய விஷயமாகும். அதுவும் அறிமுக போட்டியிலேயே முதல் ஓவரில் 21 ரன்களை அள்ளிக் கொடுத்த முதல் கிரிக்கெட் வீரராக நானாகத்தான் இருப்பேன். அதனால் அத்துடன் எனக்கு வாய்ப்பு முடிந்தது என்றும் நினைத்தேன். ஆனால் ஆசிர்வாதத்துடன் மஹி பாய் தலைமையில் விளையாடிய என்மீது அவர் நிறைய நம்பிக்கை வைத்ததே இந்த வளர்ச்சியை பெற உதவியது”

Pandya

“மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் வெறும் 3 போட்டியில் மட்டுமே விளையாடிய எனக்கு உலகக்கோப்பை அணியில் நிச்சயம் வாய்ப்புள்ளது என்று தோனி தெரிவித்தார். எனவே உலக கோப்பையில் விளையாடுவதை 3-வது ஆட்டத்திலேயே தெரிந்து கொண்டேன். இத்தனைக்கும் அந்தப் போட்டியில் நான் பேட்டிங் கூட செய்யவில்லை. இருப்பினும் நீங்கள் உங்களை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதால் உங்களுக்கு வாய்ப்பு அளித்ததாக அவர் என்னிடம் தெரிவித்தார். அது கனவு நிஜமான ஒரு தருணமாகும்” என்று பேசினார்.

- Advertisement -

பொதுவாகவே இளம் வீரர்களின் திறமையை ஒருசில போட்டிகளிலேயே கண்டறியும் தன்மை கொண்ட மகத்தான கேப்டனாக கருதப்படும் எம்எஸ் தோனி அறிமுகப் போட்டியில் தடுமாறினாலும் பாண்டியாவிடம் நல்ல திறமை உள்ளது என்பதை உணர்ந்து அவரை நம்பி உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் வாய்ப்பளித்தார். அவரின் நம்பிக்கையை வீணடிக்காமல் வகையில் பாண்டியாவும் செயல்பட்டார் என்று கூறலாம்.

pandya 1

ஆம் 2016 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான முக்கிய போட்டியில் வென்றால் மட்டுமே நாக்-அவுட் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற தருணத்தில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட போது பாண்டியாவிடம் அந்த ஓவரை தோனி நம்பி வழங்கினார்.

இதையும் படிங்க : இன்னும் 5 வருடத்துக்குள் ஐ.பி.எல் தொடரில் இந்த விஷயம் மாறும். நீங்க வேணா பாருங்க – முன்னாள் வீரர் உறுதி

அதில் முதல் 3 பந்திலேயே 9 ரன்கள் கொடுத்த பாண்டியா வெற்றியையும் தாரை வார்த்தார் என்று நினைத்த வேளையில் அடுத்த 3 பந்துகளில் 2 விக்கெட் தோனி செய்த ரன் அவுட் உட்பட வெறும் 1 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வெற்றி பெற உதவியதை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

Advertisement