கே.எல் ராகுல் – அதியா ஷெட்டி தம்பதிக்கு திருமண பரிசாக விலையுயர்ந்த பரிசை வழங்கிய – தல தோனி

KL-Rahul-and-Dhoni
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி இளம் வீரரான கே.எல் ராகுல் கடந்த சில ஆண்டுகளாகவே பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியா ஷெட்டியை காதலித்து வந்தார். இந்திய அணி எங்கு சென்று விளையாடினாலும் கே.எல் ராகுலுடன் பயணிக்கும் அதியா ஷெட்டி பல நிகழ்ச்சிகளிலும் அவருடன் ஒன்றாக பங்கேற்றுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு தாங்கள் இருவரும் காதலிப்பதை வெளி உலகத்திற்கு வெளிப்படையாக அறிவித்திருந்தனர்.

Athiya-KL-Rahul

அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தனர். அந்த வகையில் தற்போது கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டியின் திருமணம் கடந்த ஜனவரி 23-ஆம் தேதி காண்டாலாவில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பிரபலங்கள் என 70 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் அந்த திருமண நிகழ்வு விமர்சையாக நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் தற்போது இந்திய அணி தொடர்ச்சியான போட்டிகளில் பங்கேற்று வருவதாலும் கே.எல் ராகுலும் இந்திய அணியுடன் இணைய இருப்பதாலும் உடனடியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த முடியாது என்றும் அதன் காரணமாக ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு மும்பையில் பிரம்மாண்டமாக நண்பர்கள் மற்றும் அவருடன் விளையாடிய மற்றும் தற்போது விளையாடும் வீரர்கள் என அனைவரையும் அழைத்து பெரிய வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவும் கே.எல் ராகுல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Ninja

இந்நிலையில் இந்த திருமண நிகழ்விற்கு நெருங்கிய உறவினர்களோடு சேர்த்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தல தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரும் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்ட வேளையில் விராட் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருவதால் அவரால் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை.

- Advertisement -

அதேவேளையில் மகேந்திர சிங் தோனி அவரது திருமணத்திற்கு சென்றாரா? என்பது குறித்தும் உறுதியான தகவல் இல்லை ஆனாலும் தற்போது கே.எல் ராகுல் மற்றும் அதியா ஷெட்டி திருமண தம்பதிக்கு தோனி அளித்துள்ள பரிசு என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த வகையில் புது மாப்பிள்ளை கே.எல் ராகுலுக்கு தல தோனி கவாசகி நிறுவனத்தின் நிஞ்சா பைக்கினை பரிசாக அளித்துள்ளார்.

இதையும் படிங்க : ஒருநாள் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களிடம் முரட்டு அடி வாங்கி பந்து வீச்சில் சதமடித்த டாப் 3 பவுலர்கள் – பரிதாப பதிவு

இந்திய மதிப்பில் சுமார் 80 லட்சம் கொண்ட இந்த விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை அவர் தனது திருமண பரிசாக கே.எல் ராகுலுக்கு வழங்கி உள்ளார். இதுகுறித்த தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தோனியை போன்றே பலரும் பல விலையுயர்ந்த பரிசுகளை கே.எல் ராகுலுக்கு வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement