மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அனியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6 தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கின்றது. இந்நிலையில் சிஎஸ்கே மற்றும் சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
4 ஆவது இந்திய வீரராக மஹேந்திர சிங் தோனி நிகழ்த்தவுள்ள சாதனை :
இதன் காரணமாக தற்போது இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கும் கேப்டன் மகேந்திர சிங் தோனி நான்காவது இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார்.
அது குறித்த விவரம் வெளியாகி தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டியில் தோனி நிகழ்த்த இருக்கும் சாதனை யாதெனில் : இதுவரை ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் 399 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இன்றைய சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருப்பதன் மூலம் 400 வது டி20 போட்டியில் விளையாட இருக்கிறார்.
இதற்கு முன்னதாக இந்திய அளவில் மூன்று வீரர்கள் மட்டுமே 400 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த பட்டியலில் ரோகித் சர்மா 456 டி20 போட்டியில் விளையாடி முதல் இடத்திலும், தினேஷ் கார்த்திக் 412 போட்டிகளில் விளையாடி இரண்டாவது இடத்திலும், விராட் கோலி 407 டி20 போட்டிகளில் விளையாடி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
அவர்களுக்கு அடுத்து நான்காவது வீரராக டி20 போட்டிகளில் 400 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் என்ற பெருமையை தோனி பெறவுள்ளார். இதுவரை 399 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 38 ரன்கள் சராசரியுடன் 7556 ரன்களை குவித்துள்ளார். அதில் அதிகபட்சமாக 84 ரன்களையும் 28 அரை சதங்களையும் விளாசியுள்ளார்.
இதையும் படிங்க : தேவாலட் ப்ரேவிஸ் சிஎஸ்கே’வுக்கு அறிமுகம் ஆகிறாரா? வெற்றியை பறிக்கும் 75 ரன்ஸ் பற்றியும்.. பிளெமிங் பேட்டி
அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பிங்கில் 318 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச அளவில் ஒட்டுமொத்தமாக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீரராக பொல்லார்டு 695 போட்டிகளுடன் முதலிடத்திலும், டுவைன் பிராவோ 582 போட்டிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



