39 வயதான இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். தோனி சர்வதேச கிரிக்கெட்டில் படைக்காத சாதனைகளே இல்லை என்று சொல்லலாம் அந்த அளவிற்கு பல சாதனைகளை தன்னுள் வைத்திருக்கும் அவர் ஒரு விக்கெட் கீப்பராகவும் எப்பொழுதும் மிகச் சிறந்த வெளிப்பாட்டை அளித்து வருகிறார்.
அவரது ஸ்டம்ப்கிங் மற்றும் கேட்ச் என அனைத்திற்கும் தனியே ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்றால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு தோனி மின்னல்வேக ஸ்டம்பிங் மற்றும் பறந்து பறந்து கேட்ச் பிடிப்பதிலும் அசத்த கூடிய திறமை படைத்தவர். இந்நிலையில் தற்போது நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
அதன்படி 19ஆவது ஓவரை சாம் கரண் வீச அந்த பந்தை டெல்லி அணி கேப்டன் ஐயர் எதிர்கொண்டார். ஷார்ட் பிட்ச் பந்தை அடிக்க முயன்ற ஐயர் பேட்டில் இருந்து எட்ஜ் ஆகி பின்னே செல்ல அதை டைவ் அடித்து தோனி பிடித்தார்.
வலது பக்கமாக டைவ் அடித்து தோனி சில நொடிகள் காற்றில் பறந்து அந்த பந்தை முழுமையாகக் கேட்ச் செய்து கீழே விழுந்தார். இந்த கேட்ச் ரசிகர்களின் பெருத்த வரவேற்பைப் பெற்றது. அது மட்டுமின்றி இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.