சி.எஸ்.கே அணிக்காக இவங்க கெடைச்சதுக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கணும் – தல தோனி பெருமிதம்

Dhoni 1

ஐபிஎல் தொடரின் மூன்றாவது சீசன் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட இத்தொடரின் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த நேரத்தில் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டு பரிதாப நிலையில் உள்ளது. ஆனாலும் சிஎஸ்கே அணியின் மீது கொண்ட அன்பினை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இத்தொடரில் இருந்து சிஎஸ்கே அணி வெளியேறினாலும் மீதமுள்ள போட்டிகளுக்கு தங்கள் ஆதரவு எப்போதும் உண்டு என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேபோன்று சென்னை அணி தோற்றாலும் அவர்கள் மீதான ஆதரவை தொடர்ந்து வழங்கிக் கொண்டே தான் வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சென்னை அணியின் கேப்டன் தோனி சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : சென்னை அணியின் ரசிகர்கள் சிறப்பானவர்கள். அவர்கள் கிரிக்கெட்டை புரிந்து வைத்திருக்கும் தன்மை சற்று வித்தியாசமானது. சிஎஸ்கே அணி மோசமான தருணங்களைக் எதிர்கொள்ளும் போதும் அணி உடனே துணை நிற்கின்றனர். உண்மையான ரசிகர்கள் என்றால் அது சிஎஸ்கே ரசிகர்கள் தான்.

CSK-Fans

சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும் விமர்சனங்களை முன்வைக்காமல் இல்லை ஆனால் அந்த விமர்சனங்கள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாகவும், அணியின் முன்னேற்றத்திற்கு தேவையான விமர்சனங்களாக உள்ளன. இதுபோன்ற ரசிகர்கள் எங்கள் அணிக்கு கிடைத்ததற்கு நாங்கள் உண்மையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சென்னை ரசிகர்கள் நாங்கள் எப்பொழுதும் முதலிடத்தில் இருக்க வேண்டும் எனவே என்றே விரும்புகின்றனர்.

- Advertisement -

csk fans

ஒவ்வொரு முறையும் அவர்கள் எங்களிடம் இருந்து சிறப்பான விளையாட்டை எதிர்பார்க்கின்றனர். கிரிக்கெட்டில் இது போன்று நடக்க சில அதிர்ஷ்டங்கள் தேவைப்படுகிறது. நாங்கள் மோசமான எதிர் கொள்ளும் போதும் அவர் அவர்கள் எங்களுடன் இணைந்து இருக்கிறார்கள். மேலும் நாங்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்கள் எங்களுக்காக துணை நின்று இருக்கிறார்கள் என்று ரசிகர்கள் குறித்து தோனி நெகிழ்ச்சியாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.