தல தோனியின் கடைசி போட்டி இதுதான். உறுதியான தகவலை வெளியிட்ட சி.எஸ்.கே நிர்வாகம் – இதோட ஓவர்

Dhoni
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசனானது அடுத்த மாதம் மார்ச் 31-ஆம் தேதியிலிருந்து துவங்க உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை வெளியானதில் இருந்தே தற்போது இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த 16-வது சீசனின் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Hardik Pandya MS DHoni GT vs CSK

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் சென்னை அணியின் கேப்டன் தல தோனிக்கு கடைசி சீசன் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது தமிழக ரசிகர்கள் ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

அதேபோன்று தான் ஓய்வு பெற்றால் நிச்சயம் சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் விளையாடி விட்டு சென்னை ரசிகர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு தான் ரசிகர்கள் மத்தியில் ஓய்வு முடிவினை அறிவிப்பேன் என்று தோனி கூறி இருந்த வேளையில் தற்போது தோனியின் கடைசி பேர்வெல் போட்டி நிகழ்ச்சி குறித்து சிஎஸ்கே நிர்வாகத்தின் அதிகாரி ஒருவர் முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார்.

MI vs CSK Ms Dhoni Rohit Sharma

அதன்படி மே 14-ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி நடைபெற உள்ளது. அந்த போட்டிக்கு பிறகு சிஎஸ்கே அணிக்கு சென்னையில் வேறு எந்த போட்டியும் கிடையாது என்பதனால் அந்த போட்டியே தோனியின் கடைசி பேர்வெல் போட்டியாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

அதுமட்டுமின்றி ஒருவேளை சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் அதன் பிறகு சென்னையில் போட்டி இருக்காது என்று தெரிகிறது. எனவே மே 14-ஆம் தேதி நடைபெற இருக்கும் அந்த போட்டிக்கு முன்னதாக தோனிக்கு விடை கொடுக்கும் விதமாக ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்றினையும் நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிஎஸ்கே அதிகாரி முக்கிய தகவலை கூறியுள்ளார்.

இதையும் படிங்க : எம்எஸ் தோனி – ரோஹித் சர்மா ஆகியோரில் சிறந்த ஐபிஎல் கேப்டன் யார்? விவாதத்தில் சேவாக் – ஹர்பஜன் சிங் ஸ்வாரஸ்சிய பதில்

மேலும் இது குறித்து பிசிசிஐ-யிடமும் கூறி அனுமதி பெற்று விட்டதாகவும் எனவே நிச்சயம் சேப்பாக்கம் மைதானத்தில் மே 14-ஆம் தேதி தோனிக்கு பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement