மீண்டும் வின்டேஜ் வகை அறிய காரில் ராஞ்சியை வலம் வந்த தோனி – இந்த கார்ல என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Dhoni-Car
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி எவ்வளவு பெரிய பைக் பிரியர் என்பது நாம் அறிந்ததே. அதோடு அரியவகை கார்களையும் சேகரித்து வைத்திருக்கும் தோனி ராஞ்சியில் உள்ள தனது பண்ணை வீட்டில் கார் மற்றும் பைக்குகளுக்கு எனவே தனியாக ஒரு கேரேஜ்யையே வைத்து அவற்றை பராமரித்து வருகிறார். மேலும் அவ்வப்போது அந்த வாகனங்களில் ரைடும் சென்று வருகிறார்.

சமீபத்தில் ராஞ்சிக்கு சென்ற இந்திய அணியின் முன்னாள் வீரரான வெங்கடேஷ் பிரசாத் தோனியின் வீட்டிலிருந்த கேரேஜ்ஜிற்கு சென்று அங்கிருந்த பைக்குகள் மற்றும் கார்களை வீடியோவாக எடுத்து தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் : 50-க்கும் மேற்பட்ட பைக்குகளும், பத்திற்கும் மேற்பட்ட அரிய வகை கார்களும் இருந்ததை அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த தோனி தற்போது ஐபிஎல் தொடரில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார்.

இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு மாதம் மட்டுமே நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடும் தோனி மீதமுள்ள நாட்களை அவர ரஞ்சி பண்ணை வீட்டில் தான் கழிக்கிறார். அப்படி தனது வீட்டில் இருக்கும் போது தனது கேரேஜில் இருக்கும் பைக் மற்றும் கார்களை அவரே சீரமைத்து அதில் பயணமும் செய்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே சமீபத்தில் அரிய வகை பென்ஸ் காரில் தோனி வெளியே சென்றிருந்த வேளையில் தற்போது மீண்டும் ஒரு அரிய வகை விண்டேஜ் காரில் பயணம் செய்துள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : அதுக்கு அப்றம் தான் என்னோட வாழ்க்கை மொத்தமா மாறிடுச்சு, இந்தியாவுக்கு விளையாட தேர்வானது பற்றி – ரிங்கு நெகிழ்ச்சி பேட்டி

அந்த வகையில் 40 ஆண்டுகள் பழமையான ஆம்.எஸ்டி 455 வகை காரரான இது ஒரு இடதுகை ஸ்டேரிங் உள்ள சொகுசு கார் என்பதும் இதில் இரு நபர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சாலை விதிமுறைகளை பின்பற்றி சீட் பெல்ட் அணிந்தே தோனி இந்த காரில் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement