அதுக்கு அப்றம் தான் என்னோட வாழ்க்கை மொத்தமா மாறிடுச்சு, இந்தியாவுக்கு விளையாட தேர்வானது பற்றி – ரிங்கு நெகிழ்ச்சி பேட்டி

Rinlu Singh 2.jpeg
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்தியா அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அதற்காக அறிவிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது ஏராளமான முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஏனெனில் சிலிண்டர் விற்பவர்கள் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து 2018 முதலே ஐபிஎல் தொடரில் பெஞ்சில் அமர்ந்து வந்த அவர் கடந்த வருடம் முதல் முறையாக லக்னோவுக்கு எதிரான ஒரு போட்டியில் கொல்கத்தாவை போராடி வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்து தோல்வியை சந்தித்தார்.

அதன் காரணமாக முதல் முறையாக அனைவரது கவனத்தை ஈர்த்த அவர் இம்முறை முழுமையாக 14 போட்டிகளில் வாய்ப்பு பெற்று 474 ரன்களை 59.25 என்ற சராசரியிலும் 149.52 என்ற ஸ்ட்ரைக் ரேட்டிலும் குவித்து மிகச் சிறப்பாக செயல்பட்டார். அதிலும் குறிப்பாக குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி 5 பந்துகளில் 28 ரன்கள் தேவைப்பட்ட போது 5 அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் வரலாறு காணாத அசாத்தியமான சரித்திர வெற்றியை பெற்றுக்கொடுத்து உலக அளவில் பாராட்டுகளை அள்ளினார்.

- Advertisement -

வாழ்க்கை மாறிடுச்சு:
அத்துடன் பஞ்சாப், சென்னை ஆகிய அணிகளுக்கு எதிராக மிகச் சிறந்த ஃபினிஷராக செயல்பட்டு கொல்கத்தாவின் வெற்றிகளில் பங்காற்றிய அவர் திலக் வர்மா, ருதுராஜ், ஜெய்ஸ்வால் போன்றவர்களை காட்டிலும் சவாலான அழுத்தம் மிகுந்த லோயர் மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்பட்டார். அதன் காரணமாக ஏற்கனவே இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமாக இருக்கும் இந்திய அணியில் 2024 டி20 உலக கோப்பையில் ஃபினிஷராக செயல்படும் திறமையை கொண்டிருந்தும் அவரை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தேர்ந்தெடுக்காதது நிறைய விமர்சனங்களை எழுப்பியது.

அதன் காரணமாக ஒரு வழியாக செப்டம்பர் மாதம் நடைபெறும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவர் தேர்வாகியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் 5 தொடர்ச்சியான சிக்சர்களை அடித்த பின் அனைவரும் எங்கு பார்த்தாலும் தன்னை அடையாளம் கண்டு பாராட்டுவதாக ரிங்கு சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

அதை விட அந்த 5 சிக்சர்களே இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை தமக்கு பெற்றுக் கொடுத்து தம்முடைய வாழ்க்கையை மாற்றியுள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். தற்போது தியோதார் கோப்பையில் விளையாடி வரும் அவர் இது பற்றி பிசிசிஐ இணையத்தில் பேசியது பின்வருமாறு. “அந்த 5 சிக்ஸர்களுக்கு பின் வாழ்க்கை முழுவதுமாக மாறியுள்ளது. அதற்கு முன்பு வரை யாரிடமும் பிரபலமில்லாமல் ஒரு சிலருக்கு மட்டுமே நான் தெரிந்தவராக இருந்தேன். ஆனால் அந்த போட்டிக்கு பின் நிறைய மக்கள் என்னைப் பற்றி தெரிந்து கொண்டுள்ளார்கள்”

“எனவே அது மிகவும் ஸ்பெஷல் இன்னிங்ஸ் ஆகும். அந்த போட்டிக்கு பின்வே ரசிகர்களும் என்னை லார்ட் என்று அவர்கள் விருப்பத்திற்ககேற்ப அழைக்கின்றனர். அதன் காரணமாகவே இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பையும் நான் பெற்றேன். மேலும் இந்தியாவுக்காக விளையாட தேர்வான போது என்னுடைய வீட்டிலிருந்த அனைவரும் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த வாய்ப்பு எங்க வீட்டில் இருக்கும் அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க:பணம், பவர் இருந்தும் உங்களால அதை மட்டும் செய்ய முடியல – இந்திய அணியை சரமாரியாக விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்

முன்னதாக பொதுவாகவே பலமான மனதை கொண்ட தாம் முதல் முறையாக இந்தியாவின் ஜெர்ஸியை அணிந்து விளையாடும் போது நிச்சயம் கண்கலங்கி விடுவேன் என்று ரிங்கு சிங் தெரிவித்திருந்தார். மேலும் இந்தியாவுக்காக விளையாடும் முதல் நாளை தாம் வளர்வதற்கு முக்கிய காரணமாக இருந்த பெற்றோர்களுக்கு சமர்ப்பணம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் களமிறங்க தயாராகி வரும் அவர் அதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தொடர் வாய்ப்புகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement