வீடியோ : ஜடேஜாவை போன்றே “ஸ்வார்ட் செலிப்ரேஷன்” செய்த தோனி – வைரலாகும் பதிவு

Dhoni

இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரருமான ரவீந்திர ஜடேஜா சர்வதேசப் போட்டிகளிலும் சரி, ஐபிஎல் தொடர் ஆக இருந்தாலும் சரி பேட்டிங்கில் தான் அரை சதம் அடித்தாலும் அல்லது சதம் அடித்தாலும் தனது பேட்டை வால் போன்று எடுத்து சுழற்றுவது வழக்கம். அவர் செய்யும் இந்த கொண்டாட்டத்திற்கு “ஸ்வார்ட் செலிப்ரேஷன்” என்ற பெயரும் உண்டு.

jadeja 1

சர்வதேச போட்டிகளில் ஸ்வார்ட் செலிப்ரேஷன் செய்வது போலவே ஐபிஎல் போட்டிகளிலும் ஜடேஜாவின் இந்த செலிப்ரேஷன் ரசிகர்களிடையே பிரபலமான ஒன்று. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பயிற்சியின்போது ஜடேஜா போன்றே தோனி ஸ்வார்ட் செலிப்ரேஷன் செய்த வீடியோ ஒன்று தற்போது சிஎஸ்கே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதில் ராபின் உத்தப்பா உடன் அமர்ந்திருக்கும் தோனி தனது கையினால் ஸ்வார்ட் செலிப்ரேஷன் போன்று அசைவுகளை செய்கிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Chennai Super Kings (@chennaiipl)

இந்நிலையில் இந்த வீடியோவினை கண்ட ஜடேஜா வெறும் கையினால் செய்வதைவிட “ஸ்வார்ட் செலிப்ரேஷன்” னை பேட்டை கொண்டு நீங்கள் செய்ய வேண்டும் என தோனிக்கு அன்புக்கட்டளை விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமின்றி அதிகளவு பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது

- Advertisement -
Advertisement