துபாயில் தோனியுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட ஹார்டிக் பாண்டியா – மேலும் 2 இந்திய வீரர்களும் பங்கேற்பு

Dhoni-Dance
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் நிறைய ஓய்வு நேரம் கிடைப்பதனால் இயற்கை விவசாயம், திரைப்பட தயாரிப்பு என பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அதோடு அவ்வப்போது குடும்பத்துடன் சுற்றுலாவும் சென்று வருகிறார். அந்த வகையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் சி.எஸ்கே.கே அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் அவர் தற்போது தனது குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ளார்.

துபாயில் நடந்த தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றிருந்த எம்.எஸ் தோனி தனது மனைவியுடன் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டார். இந்நிலையில் அண்மையில் நியூசிலாந்தில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை கேப்டனாக வழிநடத்தி கோப்பையை கைப்பற்றிய ஹார்டிக் பாண்டியாவும் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

- Advertisement -

அதன்படி நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரை அடுத்து தற்போது ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த ஒருநாள் தொடருக்கான அணியில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டுள்ள ஹார்டிக் பாண்டியா நேராக துபாய் சென்று தோனியுடன் அந்த பார்ட்டியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் தோனியும், ஹார்டிக் பாண்டியாவும் அந்த பிறந்தநாள் விழாவின் போது நடனமாடும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தோனியின் மனைவி சாக்சி இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அதில் பிரபல ராப் பாடகர் பாட்ஷாவுடன் தோனியும் பாட்டு பாடுவது, அவருடன் இணைந்து நடனம் ஆடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் ஹார்டிக் பாண்டியா, தோனி என அனைவருமே மிக மகிழ்ச்சியாக அந்த பார்ட்டியில் கலந்து கொண்டு நடனமாடி, பாட்டுப்பாடி தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்கள்.

இதையும் படிங்க : அவங்க 2 பேர் விளையாடுறத பாத்தா இந்திய அணிக்கு நல்ல எதிர்காலம் இருக்குனு தோனுது – வாசிம் ஜாபர் கருத்து

இந்த பார்ட்டியில் ஹர்திக் பாண்டியாவுடன் அவரது மூத்த சகோதரர் க்ருனால் பாண்டியா மற்றும் மற்றும் ஜார்கண்டை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான இஷான் கிஷன் என மேலும் இரண்டு வீரர்களும் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement