ஐ.பி.எல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடியது மட்டுமின்றி மற்றொரு சாதனையும் படைத்த தோனி – விவரம் இதோ

Dhoni-2

சர்வதேச அளவில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக திகழ்ந்த மகேந்திர சிங் தோனி தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின் ஐபிஎல் தொடர்களில் மும்முரமாக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சி.எஸ்.கே அணிக்காக தலைமை தாங்கி வருவது மட்டுமின்றி அதிரடியாக ரன்களையும் குவித்து வருகிறார்.

Dhoni

கடந்த பத்து வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், இரண்டு வருடம் புனே அணிக்காகவும் விளையாடியவர் பெரும்பாலும் விக்கெட் கீப்பராக தான் களம் இறங்கி இருக்கிறார்
விக்கெட் கீப்பராக இருக்கும் போது பல சாதனைகள் படைத்து இருக்கிறார். சர்வதேச அளவிலும் ஒரு விக்கெட் கீப்பராக தோனி பல சாதனைகள் படைத்து இருக்கிறார்.

சர்வதேச அளவில் அதிக ஸ்டம்பிங் மற்றும் அதிக கேட்ச் பிடித்தவர்களின் தோனி முதலிடத்தில் இருக்கிறார். அதே நேரத்தில் ஐபிஎல் தொடரில் நேற்று ஒரு கேட்ச் பிடித்து இருந்தார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் அடித்த பந்தை கேட்ச் பிடித்த தோனி ஐபிஎல் தொடரில் 100 கேட்ச் பிடித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

Dhoni

முதலிடத்தில் ஏற்கனவே தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக ஐ.பி.எல் போட்டிகளில் 100 கேட்ச்களை பிடித்துள்ளார். அதே நேரத்தில் அதிக ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிய சாதனையம் அவர் சமீபத்தில் படைத்தார். நேற்றைய போட்டி ஐ.பி.எல் தொடரில் அவரது 195 ஆவது போட்டியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Raina-2

சுரேஷ் ரெய்னா 193 போட்டிகள் விளையாடி முதலிடத்தில் இருந்தார். அதனை சமீபத்தில் முறியடித்த அவர் ஐபிஎல் தொடர்களில் அதிக போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார் மகேந்திரசிங் தோனி.