- Advertisement -
ஐ.பி.எல்

பேபி ஏ.பி.டி ன்னா சும்மாவா.. சீட்டில் அமர்ந்திருந்த தோனியை கைதட்ட வைத்த ஆட்டம் – விவரம் இதோ

இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் இருந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிஎஸ்கே அணியானது ஏற்கனவே பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பு இழந்து விட்டதால் இந்த தொடரின் பிற்பாதியில் தற்போது பல இளம் வீரர்களை அணிகள் கொண்டு வந்து பிளேயிங் லெவனை பலப்படுத்தும் முயற்சியில் சி.எஸ்.கே அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி செயல்பட்டு வருகிறார்.

தோனியை கைதட்ட வைத்த பிரேவிஸ் :

அந்த வகையில் ஏற்கனவே சென்னை அணியில் பல்வேறு இளம் வீரர்கள் இடம் பிடித்து விளையாடி வரும் வேளையில் சென்னை அணியின் மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்பட்ட மிடில் ஆர்டரிலும் அதிரடியாக விளையாடும் இளம் வெளிநாட்டு வீரரை தற்போது சரியாக நிரப்பியுள்ளது சென்னை அணிக்கு பலத்தை சேர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இந்த தொடரில் மாற்று வீரராக இடம்பிடித்த தென்னாப்பிரிக்க இளம் வீரரான டேவால்டு பிரேவிஸ் சிஎஸ்கே அணியில் இடம்பிடித்ததில் இருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சென்னை அணி இந்த ஆண்டு முழுவதுமே மிடில் ஆர்டரில் பெரியளவில் அதிரடியாக ஆடும் பிளேயர் இல்லாமல் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த வேளையில் அவர் வந்ததிலிருந்து மிடில் ஓவர்களிலும் அற்புதமாக ரன்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் குஜராத் அணிக்கு எதிராக இன்று நடைபெற்று வரும் கடைசி லீக் போட்டியில் விளையாடி வரும் சிஎஸ்கே அணியானது மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளது.

- Advertisement -

இந்த போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேவிஸ் ஐந்தாவது வீரராக களமிறங்கி 23 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் என 57 ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்நிலையில் இந்த போட்டியின் போது கடைசி கட்டத்தில் பிரேவிஸ் வேகப்பந்து வீச்சாளர்களையும், சுழற்பந்து வீச்சாளர்களையும் எதிர் கொண்டு சிக்ஸரையும், பவுண்டரியுமாக விளாசினார்.

இதையும் படிங்க : இங்கிலாந்தில் நிச்சயம் பெரிய சவாலை சுப்மன் கில் சந்திப்பார்.. காரணம் இதுதான் – புஜாரா பேட்டி

அதனை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தது மட்டுமின்றி ஓய்வறையில் இருந்து வீரர்களுடன் அவரது ஆட்டத்தை ரசித்து பார்த்த தோனியும் பிரேவிஸ் அரைசதம் அடித்ததும் அவரை டக்கவுட்டில் அமர்ந்தபடி கைத்தட்டி பாராட்டி அவரது ஆட்டத்தை வியந்து மகிழ்ந்தார். ரசிகர்கள் மத்தியில் “பேபி ஏ.பி.டி” என்று பெயர் பெற்ற பிரேவிஸ் தான் சி.எஸ்.கே அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரம் என்றும் பலரும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -