
இந்தியாவில் கடந்து 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் வேளையில் இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் 18 வது சீசனானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் எதிர்வரும் இந்த ஐபிஎல் தொடரானது மார்ச் 22-ஆம் தேதி துவங்கி மே மாதம் 25-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான மெகா ஏலம் கடந்து சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த வேளையில் அனைத்து அணிகளும் தற்போது இந்த தொடருக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இம்முறை தோனிக்காக ஐபிஎல் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் தயாராகி வருகிறது.
இந்நிலையில் தற்போது 43 வயதாகும் தோனிக்கு இதுவே கடைசி ஐபிஎல் தொடர் என்பதினால் எந்த தொடரை வெற்றி பெற்று அவருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகவும் உள்ளது. மேலும் தோனி ஏற்கனவே 4 கோடி ரூபாய்க்கு அன் கேப்டு வீரராக சென்னை அணியில் தக்கவைக்கப்பட்ட வேளையில் இந்த ஆண்டு மட்டுமே அவர் கடைசியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் இந்த 18-வது ஐபிஎல் தொடருக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் தோனி வயதிற்கு ஏற்ப சில மாற்றங்களையும் செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தான் இதுவரை பயன்படுத்திய பேட்டில் இருந்து தற்போது சிறிய மாற்றங்களை அவர் செய்துள்ளார்.
அந்த வகையில் ஏற்கனவே தோனி தான் பயன்படுத்திய பேட்டின் எடையாக 1250 கிராம் முதல் 1300 கிராம் எடையுடைய மட்டையையே பயன்படுத்தி வந்தார். ஆனால் தற்போது அவரது உடற்தகுதியை கணக்கில் கொண்டு 10 முதல் 20 கிராம் வரை குறைத்து 1230 கிராம் எடையுள்ள நான்கு பேட்டுகளை டெலிவரி செய்த அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
இதையும் படிங்க : முதல் மேட்ச்ன்னா இந்நேரம் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்திருக்கும்.. கோலி கம்ப்ளீட் பேக்கேஜ்.. ரமீஸ் ராஜா
ஏற்கனவே கடந்த ஆண்டு கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த தோனி இதுபோன்ற ஒரு சில மாற்றங்களை செய்தால் தான் இந்த ஆண்டு விளையாட முடியும் என்பதற்காகவே ரசிகர்களின் அன்புக்காக இது போன்ற மாற்றங்களை செய்து வருகிறார். நிச்சயம் இந்த ஆண்டு வெளியேற இருக்கும் அவரை கோப்பையுடன் வழியனுப்ப வேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.