MS Dhoni : கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றபின் இந்த வேலையினை செய்யவே விரும்புகிறேன் – தோனி ஓபன் டாக்

இந்திய அணியின் முன்னணி கேப்டன் தோனி இந்திய அணிக்காக 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்து வகையான ஐ.சி.சி. கோப்பை

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி கேப்டன் தோனி இந்திய அணிக்காக 50 ஓவர் உலக கோப்பை, 20 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என அனைத்து வகையான ஐ.சி.சி. கோப்பைகளையும் இந்திய அணிக்காக பெற்று தந்த ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

dhoni

- Advertisement -

தற்போது 38 வயதாகும் தோனிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை தொடர் எனவே இந்த உலக கோப்பை போட்டிகள் முடிந்து தோனி தனது ஓய்வு அறிவிப்பார் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தோனி தற்போது வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கிரிக்கெட்டுக்கு பிறகு தான் வாழ்வில் நினைத்தது இதைத்தான் என்று தனது எதிர்காலத்தைப் பற்றி தோனி பேசியுள்ளார்.

அதில் தோனி கூறியதாவது : போதுமான அளவு கிரிக்கெட் போட்டிகளை நான் விளையாடி விட்டேன் இதற்குப் பிறகு நான் எடுக்கப்போகும் முடிவு என் வாழ்க்கையாக மாறும் அதனால் நான் எனது ஆசையான ஓவியம் வரையும் வேலையை எடுக்கப் போகிறேன் என்று தான் கையால் வரைந்த சில ஓவியங்களை காண்பித்தார். மேலும் தான் படைத்த ஓவியங்களை ஒரு கண்காட்சியாக காண்பிக்கவும் தோனி திட்டமிட்டுள்ளார்.

dhoni

அதற்கு இன்னும் கொஞ்சம் சில நாட்கள் ஆகும் என்றும் மேலும் நேரம் வரும்போது கண்டிப்பாக எனது ஓவியங்களை கண்காட்சியாக வைப்பேன் என்றும் டோனி கூறினார். எனவே தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபின் என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பதிலாக தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஓவியராக மாறுவேன் என்று தோனி இந்த வீடியோ மூலமாக பதிலளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement