தோனி ரிட்டயர்டு ஆனாலும் அடுத்து சி.எஸ்.கே அணியில் காத்திருக்கும் பதவி – சுவாரசிய தகவல் இதோ

Dhoni-1
- Advertisement -

தோனி 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 15 கோடிகள் கொடுத்து வாங்கப்பட்டார். அப்போது தோனியை சென்னை அணி எடுக்க மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய அணிகளுடன் கடுமையாக ஏலத்தில் மோதியது குறிப்பிடத்தக்கவை.

- Advertisement -

அதன் பின்னர் சென்னை அணியின் காலமே ராஜாங்க காலம் தான். அந்த அளவிற்கு அணியை வழிநடத்தினார் தோனி. கலந்து கொண்ட அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். ஏழுமுறை இறுதிப்போட்டியில் அணியை அழைத்துச் சென்று மூன்று முறை கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார்.

அந்த அளவிற்கு சென்னை அணிக்கும் தோனிக்கும் உள்ள இணக்கம் வேறு லெவல் ஆகி இருக்கிறது. தற்போது 39 வயதான அவர் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் ஒரு வீரராக அணியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்றே தெரிகிறது. ஆனாலும் இன்றுவரை சென்னை அணி கேப்டன் என்றால் தோனியை தவிர வேறு யாரையும் அந்த இடத்தில் வைத்து பார்க்க கூட விரும்பவில்லை.

Dhoni

இந்நிலையில் இன்னும் 10 வருடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனியின் நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து அந்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.. அவர் கூறுகையில்…

Dhoni

இன்னும் 10 வருடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனி தான் பாஸ் ஆக இருப்பார். இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் அப்படி ஒரு தொடர்பு இருக்கிறது .அணி வீரர்களிடம் எப்படி சிறப்பான ஆட்டத்தை வாங்குவது என்பதை அவர் அறிந்தவர். அதேபோல் அடுத்த தலைமுறை வீரர்களை எப்படி அணிக்கும் கொண்டு வருவதே என்பதையும் அவர் அறிந்தவர் இதனால் அவர் எப்போதும் அணியில் இருப்பார் என்று தெரிவித்துள்ளார் காசிவிசுவநாதன்.

Advertisement