ரோஹித் சர்மா கூட தொடாத மைல்கல்லை தொட்ட கேப்டன் தல தோனி – புதிய சூப்பர் டி20 சாதனை

MI vs CSK
Advertisement

ஐபிஎல் 2022 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 8-ஆம் தேதி இரவு நடைபெற்ற 55-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த வருட ஐபிஎல் தொடரின் பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்தது. நவி மும்பையில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை 20 ஓவர்களில் அதிரடியாக 208/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக பேட்டிங் செய்து முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளமிட்டனர்.

Ruturaj

அதில் ருதுராஜ் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 41 (33) ரன்கள் எடுக்க அடுத்து வந்த சிவம் துபே தனது பங்கிற்கு அதிரடியாக 32 (19) ரன்கள் விளாசினார். மறுபுறம் தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்த கான்வே 7 பவுண்டரி 5 மெகா சிக்ஸருடன் 87 (49) ரன்கள் குவித்து அசத்தினார். டெல்லி சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 3 விக்கெட்டுகளும் கலீல் அஹமத் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

- Advertisement -

சென்னை மிரட்டல்:
அதை தொடர்ந்து 209 என்ற பெரிய இலக்கை துரத்திய டெல்லிக்கு ஆரம்பம் முதலே அபாரமாக பந்துவீசிய சென்னை மிகவும் அழுத்தம் கொடுத்தது. அதற்கு தாங்க முடியாமல் பரத் 8 (5) டேவிட் வார்னர் 19 (12) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அப்போது மிட்சேல் மார்ஷ் 25 (20) ரிஷப் பண்ட் 21 (11) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பேட்டிங் செய்தாலும் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

DC vs CSK

அந்த இக்கட்டான சூழ்நிலையில் ரோவ்மன் போவல் 3 (9) அக்சர் படேல் 1 (3) போன்ற வீரர்களும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி ஏமாற்றியதால் 17.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து டெல்லி வெறும் 117 ரன்களில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. இந்த தோல்வியால் பங்கேற்ற 11 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்த டெல்லி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை குறைத்துக் கொண்டது. சென்னை சார்பில் பந்துவீச்சில் கலக்கிய மொயீன் அலி 3 விக்கெட்டுகளையும் சிமர்ஜித் சிங், முகேஷ் சவுத்ரி, டுவைன் பிராவோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

- Advertisement -

இந்த அபார வெற்றியால் பங்கேற்ற 11 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்த சென்னை கொல்கத்தாவை முந்தி முதல் முறையாக 8-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. தற்போதைய நிலைமையில் அடுத்த 3 போட்டிகளில் இதேபோல் வெற்றி பெற்றாலும் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு குறைவான வாய்ப்புகளே காணப்படுகிறது.

Dhoni 1

பினிஷிங் தல தோனி:
இருப்பினும் கூட அந்த அணிக்கு கேப்டனாக 4 கோப்பைகளை வென்று கொடுத்த நட்சத்திர ஜாம்பவான் எம்எஸ் தோனி மீண்டும் திரும்பியுள்ளது கடந்த சில போட்டிகளாகவே பெரிய புத்துணர்ச்சியாக அமைந்து வெற்றிப் பாதையில் நடக்க வைத்துள்ளது. எனவே அவரின் அபார கேப்டன்ஷிப் திறமையுடன் எஞ்சிய போட்டிகளிலும் வெற்றி பெற்று அதிர்ஷ்டத்தின் உதவியுடன் சென்னை பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்ற சிறிய நப்பாசை அந்த அணி ரசிகர்களிடம் இன்னமும் காணப்படுகிறது.

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் கான்வே, ருதுராஜ், ஷிவம் துபே ஆகியோர் நல்ல ரன்களை எடுத்து சென்னை பெரிய ஸ்கோர் அடிக்க வலுவான அடித்தளமிட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் ராயுடு 5 (6), மொய்ன் அலி 9 (4), உத்தப்பா 0 (1) ஆகியோர் அதிரடியாக அடிக்க முயன்று வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினார். அதனால் சென்னைக்கு திடீர் பின்னடைவு ஏற்பட்ட நிலையில் வழக்கம்போல அதிரடி காட்டிய தோனி 1 பவுண்டரியும் 2 மெகா சிக்ஸர்களையும் பறக்க விட்டு 21* (8) ரன்களை விளாசி அபார பினிஷிங் கொடுத்தார். மீண்டும் ஒருமுறை தன்னை சிறந்த மிகச்பினிசர் என நிரூபித்த அவரின் ஆட்டத்தை மைதானத்தில் இருந்து பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஏகிறினார்கள்.

Dhoni-1

தல 6000:
முன்னதாக இப்போட்டியில் 21* ரன்கள் அடித்த அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 6000 ரன்களை கடந்த 2-வது கேப்டன் என்ற புதிய சாதனை படைத்தார். ஏற்கனவே விராட் கோலி இந்த சாதனையை படைத்துள்ள நிலையில் 3-வது இடத்தில் இருக்கும் ரோகித் சர்மா ஒரு டாப் ஆர்டர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்த போதிலும் இன்னும் 5000 ரன்களைக் கூட கிடைக்கவில்லை. ஆனால் பெரும்பாலும் மிடில் ஆடரில் பேட்டிங் செய்யும் தோனி விராட் கோலிக்கு பின் உலக அளவில் இந்த சாதனையை படைத்தது உண்மையாகவே அவரின் தரத்தை காட்டுகிறது. அந்த பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 6451
2. எம்எஸ் தோனி : 6017*
3. ரோஹித் சர்மா : 4764
4. ஆரோன் பின்ச் : 4603
5. கெளதம் கம்பீர் : 4242

Advertisement