ஐ.பி.எல் வரலாற்றில் முதல் நபராக புதிய மைல்கல்லை எட்டும் தல தோனி – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 13 முறை நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் தொடரில் 5 முறை கோப்பையை கைப்பற்றி அணி மும்பை அணி முதலிடத்திலும், மூன்று முறை கோப்பையை கைப்பற்றி சென்னை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற இத்தொடரானது ரசிகர்கள் இன்று மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறும் என பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. அதனால் கடந்த ஆண்டை விட சற்று வழக்கத்தைவிட அதிகமான எதிர்பார்ப்பு இந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் ஜாம்பவான் அணியாக பார்க்கப்படும் டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இந்த ஆண்டு எழுச்சி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தற்போது சென்னை அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் வரலாற்றில் ஒரு சுவாரசியமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை ஐபிஎல் போட்டிகளின் மூலம் அதிகம் சம்பாதித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை அணியில் தொடர்ந்து விளையாடி வரும் தோனி 150 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய முதல் வீரர் என்ற பெருமையை பெற உள்ளார்.

இந்த ஆண்டிற்கான சிஎஸ்கே அணியின் கேப்டனாக ரீடெயின் செய்யப்பட்டுள்ள தோனி இதன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு வரை தோனி ஐபிஎல் மூலம் 137 கோடிகளை சம்பளமாக பெற்றிருந்தார். அவர் சென்னை அணி இடையில் தடை செய்யப்பட்ட போது புனே அணிக்காகவும் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

dhonipathan

அதனை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டிற்கான சம்பளத்தையும் சேர்த்து அவர் 150 கோடியை கடந்து உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா 146 கோடிகளையும், அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் உள்ளனர். தோனி இதுவரை 204 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4632 ரன்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடர்களில் மட்டும் 216 சிக்சர்களை அடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement