IND vs ENG : லண்டன் லார்ட்ஸ் போட்டியை காண நேரில் வந்த தோனி. அவர்கூட யார்? யார்? – வந்திருக்காங்கனு பாருங்க

Lords-Ground
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 14 ஆம் தேதியான நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இத்தொடரின் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகித்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

அந்த அணிக்கு ஜேசன் ராய் 23, ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் 11, பென் ஸ்டோக்ஸ் 21 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக லோயர் மிடில் ஆர்டர் மொய்ன் அலி 47 ரன்களும் டேவிட் வில்லி 41 ரன்களும் லியம் லிவிங்ஸ்டன் 33 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 247 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 0, ஷிகர் 9, ரிஷப் பண்ட் 0, விராட் கோலி 16 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 31/4 என மோசமான தொடக்கத்தை பெற்றது.

- Advertisement -

அதனால் சரிந்த தங்களது அணியை காப்பாற்ற முயன்ற சூர்யகுமார் யாதவ் 26, ஹர்திக் பாண்டியா 29, ரவீந்திர ஜடேஜா 29, முகமது சமி 23 ரன்கள் எடுத்து போராடிய போதிலும் இங்கிலாந்தின் தரமான பந்துவீச்சில் 38.5 ரன்களுக்கு சுருண்ட இந்தியா பரிதாபமாக தோற்றது. இந்த வெற்றியால் 1 – 1* (3) கணக்கில் தொடரை சமன் செய்துள்ள இங்கிலாந்து முதல் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.

தல – சின்னத்தல:
முன்னதாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சௌரவ் கங்குலி ஆகியோர் நேராக வந்து போட்டியை பார்த்து இந்தியாவுக்கு ஆதரவு கொடுத்தது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. அதைவிட இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மற்றும் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் இப்போட்டியை ஒன்றாக இணைந்து பார்த்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்டிங் ஜோடியாக கருதப்படும் இவர்கள் நட்புக்கு இலக்கணமானவர்கள் என்றே கூறலாம். ஏனெனில் 2020 இந்திய சுதந்திர தினத்தில் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எம்எஸ் தோனி தனது ஓய்வை அறிவித்த அடுத்த அரை மணி நேரத்தில் நீங்கள் இல்லாத கிரிக்கெட்டில் நானும் விளையாட போவதில்லை என்ற வகையில் 33 வயதிலேயே ஓய்வை அறிவித்த சுரேஷ் ரெய்னா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார். அதற்கு காரணம் 2006 முதல் இந்தியாவுக்காக இணைந்து விளையாடிய இவர்கள் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தல – சின்னத்தல என்று தமிழக ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு மிகச்சிறந்த நண்பர்களாக பார்ட்னர்களாக விளையாடி ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்கள்.

நட்பின் இலக்கணம்:
இருப்பினும் சமீப காலங்களில் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வந்த சுரேஷ் ரெய்னாவை சுமாரான பார்ம் காரணமாக கழற்றிவிட்ட சென்னை அணி நிர்வாகம் ஏராளமான வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார் என்ற நன்றியுணர்வு கூட இல்லாமல் கடந்த பிப்ரவரியில் நடந்த ஏலத்தில் குறைந்தபட்ச விலைக்கு வாங்கி பெஞ்சில் கூட அமரும் வாய்ப்பை கொடுக்காமல் மொத்தமாக டாட்டா காட்டியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.

- Advertisement -

பெரும்பாலும் சென்னையில் விளையாடும் வீரர்களை தோனி தான் தேர்வு செய்வார் என்ற நிலைமையில் தனது நண்பரான ரெய்னாவை அவர் நினைத்திருந்தால் வாங்கியிருக்க முடியும் என்று ரசிகர்கள் கோபமடைந்தனர். மேலும் சமூக வலைதள பக்கங்களில் ரெய்னாவை பின்தொடர்வதை சென்னை நிர்வாகம் நிறுத்திக் கொண்டது. அத்துடன் ஐபிஎல் 2022 தொடரில் கேப்டன்ஷிப் பொறுப்பை மீண்டும் தோனியிடம் ஒப்படைத்த போது ரவீந்திர ஜடேஜாவை மனதார பாராட்டியிருந்த சுரேஷ் ரெய்னா தோனியை பற்றி ஒரு வார்த்தைகூட பதிவிடவில்லை.

அதனால் அவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு மற்றும் சண்டை நிலவுவதாக நிறைய செய்திகள் வந்தன. ஆனால் தற்போது இந்த போட்டியில் இருவரும் மீண்டும் நண்பர்களைப் போல் ஒருவரின் தோள் மீது ஒருவர் தோள் போட்டு சிரித்த முகத்துடன் நட்பை பகிர்ந்து கொண்டது எங்களுக்கிடையே எந்த சண்டையும் இல்லை என்பதை அனைவருக்கும் தெளிவுபடுத்தியுள்ளது.

இதையும் படிங்க : IND vs ENG : அதிர்ஷ்டமின்மை, விமர்சனம் – திண்டாடும் விராட் கோலிக்கு பாபர் அசாம் கொடுத்த மெகா ஆதரவு

இதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் அப்போ உண்மையாகவே இவர்களுக்குள் சண்டை எதுவும் இல்லையா நாம்தான் வதந்திகளை நம்பி விட்டோமா என்று வியப்பில் மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் அவர்களுடன் மற்றொரு முன்னாள் இந்திய மற்றும் சென்னைக்காக விளையாடிய ஹர்பஜன் சிங் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement