நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது.. அவர் தான் ரிட்டையராக காரணம்.. யுவி மனம் திறந்த பேட்டி

Yuvraj Singh
Advertisement

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் எம்எஸ் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இந்தியா கண்டெடுத்த மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக போற்றப்படுகிறார்கள். அதில் யுவராஜ் சிங் ஆல் ரவுண்டராக 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றி ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்தது போன்ற பல சாதனைகளை படைத்த ஜாம்பவானாக போற்றப்படுகிறார்.

மறுபுறம் விக்கெட் கீப்பிங்கில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தி மிகச் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் ஃபினிஷராகவும் செயல்பட்ட எம்எஸ் தோனி 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சரித்திரம் படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். அதை விட இந்த இருவரும் இந்தியா தடுமாறிய பல போட்டிகளில் ஜோடி சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைத்ததை ரசிகர்கள் இப்போதும் மறக்கவில்லை.

- Advertisement -

நண்பர்கள் கிடையாது:
மேலும் ஆட்டநாயகன் விருதாக கொடுத்த பைக்கில் ஒன்றாக மைதானத்தை வலம் வந்த தோனி மற்றும் யுவராஜ் ஆகியோர் மிகச்சிறந்த நண்பர்களாகவும் கருதப்படுகிறார்கள். இந்நிலையில் தாமும் தோனியும் எப்போதுமே நெருங்கிய நண்பர்களாக இருந்ததில்லை என்று தெரிவிக்கும் யுவராஜ் சிங் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடியதன் காரணமாகவே நண்பர்களாக இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் கேரியரின் கடைசியில் காரணமின்றி தேர்வுககுழு கழற்றி விட்ட போது தோனி தான் உண்மையான நிலவரத்தை தமக்கு சொன்னதாக கூறும் யுவராஜ் அதை வைத்தே 2019இல் ஓய்வு முடிவை அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார் இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நானும் தோனியும் நெருங்கிய நண்பர்கள் கிடையாது. மாறாக கிரிக்கெட்டில் விளையாடியதால் மட்டுமே நண்பர்களாக இருந்தோம். தோனி மற்றும் என்னுடைய வாழ்க்கை ஸ்டைல் வித்தியாசமானது”

- Advertisement -

“அதனால் நாங்கள் எப்போதும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததில்லை. அதே சமயம் நாட்டுக்காக களத்தில் விளையாடும் போது நானும் மஹியும் 100% எங்களுடைய பங்களிப்பை கொடுப்போம். நானும் அவரும் கேப்டன் மற்றும் துணை கேப்டனாக இருந்த போது வித்தியாசமாக இருந்தன. அதாவது சில நேரங்களில் அவர் எடுக்கும் முடிவுகள் எனக்கு பிடிக்காது. நான் எடுக்கும் முடிவுகளை அவர் விரும்ப மாட்டார். இது ஒவ்வொரு அணியிலும் நடக்கும்”

“ஆனால் என்னுடைய கடைசி காலத்தில் எனது கேரியர் பற்றிய தெளிவு இல்லாமல் தவித்தேன். அப்போது தோனியிடம் நான் அட்வைஸ் கேட்டேன். அவர் தான் தேர்வுக்குழுவினர் எனக்கு வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை என்பதை என்னிடம் நேரடியாக சொன்னார். அப்போது குறைந்தபட்சம் இவராவது என்னுடைய கேரியரை பற்றி வெளிப்படையாக சொன்னாரே என்று மகிழ்ச்சியடைந்தேன். 2019 உலகக்கோப்பைக்கு முன்பாக நடந்தது. இது தான் நிதர்சனமாகும்”

இதையும் படிங்க: ஒருவேளை இந்தியாவை நாங்க தோற்கடிச்சா இதையே சொல்விங்களா? தெ.ஆ கேப்டன் பாவுமா ஆவேச பேட்டி

“களத்திற்கு வெளியே சக வீரர்கள் நண்பர்களாக இருப்பதில்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான ஸ்டைல் திறமை இருக்கிறது. அதனால் சிலர் மட்டுமே சிலருக்கு பிடித்த நண்பர்களாக இருப்பார்கள். அனைவரும் இருப்பதில்லை. உலகின் அனைத்து 11 பேர் அணியிலும் இதே நிலைமை இருக்கும். களத்திற்கு செல்லும் போது உங்களுடைய ஈகோவை பின்னே வைத்துவிட்டு ஒன்றாக விளையாட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement