பின்கோட் முக்கியமல்ல.. இதை செஞ்சா உங்களால் கூட உலக கைப்பற்ற முடியும்.. மாணவர்களுக்கு தோனி அறிவுரை

MS Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி வரலாற்றின் மகத்தான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார்கள். ஏனெனில் ராஞ்சி போன்ற சிறிய ஊரில் பிறந்து ரயில்வே வேலையை விட்டு கிரிக்கெட்டின் மீதான காதலால் நாட்டுக்காக விளையாடத் துவங்கிய அவர் 2004இல் அறிமுகமாகி இந்தியாவின் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ஒரு எடுத்தார்.

அதை விட அனுபவமற்ற கேப்டன்ஷிப் பொறுப்பில் இந்தியாவில் சிறப்பாக வழி நடத்திய அவர் 2007 டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தார். மேலும் 2010ஆம் ஆண்டு அவருடைய தலைமையில் முதல் முறையாக ஐசிசி தரவரிசையில் இந்தியா நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. அப்படியே 2011 உலகக் கோப்பையை 28 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் வென்று இந்தியா உலக சாதனை படைத்தது.

- Advertisement -

பின்கோட் முக்கியமல்ல:

அப்போது வருங்காலத்தை கருத்தில் கொண்டு சேவாக், கம்பீர், ஹர்பஜன் உள்ளிட்ட சீனியர்களை கழற்றி விட்ட தோனி 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை கோலி, ரோஹித், தவான், ரெய்னா உள்ளிட்ட இளம் வீரர்களை வைத்து வென்று காட்டினார். இது போக 5 ஐபிஎல் கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளை வென்ற அவர் வரலாற்றின் மகத்தான கேப்டனாக போற்றப்படுகிறார்.

இந்நிலையில் 350000 மாணாக்கர்கள் கலந்து கொண்ட அலென் இன்ஸ்டியூட் கல்வி விழாவில் தோனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது இந்தியாவின் சிறிய கிராமத்தில் பிறந்தவர் கூட அர்ப்பணிப்பு, உழைப்பு போன்றவை இருந்தால் உலகை ஆள முடியும் என்று மாணவர்களுக்கு தோனி உத்வேகத்தை கொடுத்தார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

தோனியின் அறிவுரை:

“சிறிய நகரத்தின் கனவுகள் கூட உலகை வெற்றி பெற வைக்க முடியும். இனிமேலும் வெற்றி என்பது பின்கோடு பொறுத்தது அல்ல. ராஞ்சியை சேர்ந்த ஒரு பையன் சாதிக்க முடிந்தால் சரியான வழிநடத்தல், அர்ப்பணிப்பு, மனநிலை கொண்ட யாராலும் சாதிக்க முடியும். பின்புலத்தில் நடக்கும் தயாராகும் முறைகளில் கவனம் செலுத்துங்கள். அது தான் பெரிய இடத்தில் உங்களை பொறுமையையும் வெற்றியையும் நோக்கி அழைத்துச் செல்லும்”

இதையும் படிங்க: கடைசி ஐசிசி தொடரில் இதை செஞ்சு.. தோனியே செய்யாத சாதனையை செய்ங்க.. ரோஹித் பற்றி ரெய்னா

“நிகழ்காலத்தில் வாழுங்கள். தற்சமயத்தில் மகிழ்ச்சியாக இருங்கள். இந்தியாவுக்காக விளையாடுவேன் என்று நான் எப்போதும் நினைத்ததில்லை. நான் வளரும் போது விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த முயற்சித்தேன். வெற்றி தோல்விகள் என்பது வாழ்வின் அங்கம். தோல்விகளின் போது நீங்கள் பாடத்தைக் கற்றுக்கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதே வெற்றிக்கான சாவியாகும். தலைவர்களை மதியுங்கள் சவால்களை சமாளியுங்கள். கடின உழைப்புக்கு மாற்று மதிப்பு கிடையாது. அதுவே வெற்றியை தீர்மானிக்க கூடியது” எனக் கூறினார்.

Advertisement