இவர்களில் யாராவது ஒருத்தர் நின்னா போதும்..! வெற்றி குறித்து அஸ்வின் நெகிழ்ச்சி – யார் தெரியுமா ?

raviashwin
- Advertisement -

9 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் 36 வைத்து இடத்தில உள்ளது. பிலே ஆப் சுற்றிற்கு நுழையும் தகுதியை ஏற்கனவே வலுவாக வைத்துள்ளது. மேலும் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகளுடன் ஆடிய கடைசி 2 போட்டிகளிலும் தொல்வி கண்ட பஞ்சாப் அணி கடைசியாக ராஜஸ்தான் அணியுடன் வெற்றி பெற்றது.

ashwin

- Advertisement -

நேற்று கொல்கத்தாவின் இண்டோர் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்தது. மேலும் அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் மட்டும் 51 ரன்களை எடுத்துள்ளார். மேலும் பஞ்சாப் அணியில் முஜீப் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து 54 பந்துகளில் 84 ரன்களை விலாசினார். இதனால் பஞ்சாப் அணி 18.4 ஒவரில் இலக்கை எட்டி தனது வெற்றியை புள்ளி பட்டியலில் கூட்டியது.பஞ்சாப் அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய அந்த அணியின் கேப்டன் அஸ்வின்”டஜடர்ந்து இரண்டு தோல்விகளை சந்தித்ததால் எங்களுக்கு கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது. மேலும் எங்கள் அணி தொடர் தோல்வியால் புள்ளி பட்டியலில் முன்னேறாமல் இருந்ததால் கொஞ்சம் கவலையும் இருந்தது. இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

rahul

மேலும் இந்த போட்டியில் லோகேஷ் ராகுல் கடைசிவரை நின்று விளையாடினார். இதுபோன்று அணியில் ஒருவர் நின்று விளையாடினாள் போதும். டி 20 போட்டி பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் தான் அதிகம் தாக்கப்படுவார்கள், எங்கள் அணியில் சில போட்டிகளில் பந்துவீச்சாளர்களால் தான் நாங்கள் வென்றோம். நான் கேப்டனாக திறந்த மனதுடன் வந்தேன், மேலும் அணியை வெற்றி பாதையில் அழைத்து செல்வேன் என்று நினைத்தேன் அதன்படி தான் தற்போது நடந்து வருகிறேன் ” என்று தெரிவித்திருந்தார்.

Advertisement