IPL 2023 : வாழ்க்கை முடிஞ்சுன்னு நினச்சேன், ஒரு மாசம் லேட்டா போயிருந்தா ஒரு கைய கட் பண்ணிருப்பாங்க – மோசின் கான் பேட்டி

- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபில் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் லக்னோ 15 புள்ளிகளை பெற்று பிளே ஆப் சுற்றை நெருங்கியுள்ளது. அந்த வரிசையில் வெற்றிகரமான மும்பைக்கு எதிராக நடைபெற்ற கடந்த போட்டியில் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற லக்னோ புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ மார்கஸ் ஸ்டோனிஸ் 89* (47) ரன்கள் எடுத்த அதிரடியில் 178 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை துரத்திய மும்பைக்கு ரோகித் சர்மா 37, இசான் கிசான் 59 ரன்கள் என தொடக்க வீரர்கள் அதிரடியாக 90 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் நல்ல அடித்தளம் அமைத்தனர்.

அதனால் கடப்பாரை பேட்டிங் கொண்ட மும்பை எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் 7, நேஹல் வதேரா 16, விஸ்ணு வினோத் 2 என முக்கிய வீரர்களை லக்னோ சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய போதிலும் கடைசி நேரத்தில் டிம் டேவிட் அதிரடியாக 32* (19) ரன்கள் எடுத்ததால் வெற்றியை நெருக்கிய மும்பைக்கு கடைசி ஓவரில் வெறும் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த நிலையில் 25 ரன்களை கூட கட்டுப்படுத்த தடுமாறும் பல பவுலர்களுக்கு மத்தியில் டிம் டேவிட், கேமரூன் கிரீன் ஆகிய 2 அதிரடி வீரர்களை வைத்துக் கொண்டே வெறும் 5 ரன்கள் மட்டுமே கொடுத்த மோசின் கான் லக்னோவை திரில் வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

காயத்தின் பின்னணி:
உத்திரபிரதேசத்தை சேர்ந்த அவர் கடந்த 2018 முதல் இதே மும்பை அணிக்காக விளையாடி பெஞ்சில் அமர்ந்திருந்த நிலையில் கடந்த வருடம் முதல் முறையாக லக்னோ அணிக்கு வாங்கப்பட்டு 9 போட்டிகளில் 14 விக்கெட்களை 5.97 என்ற அபாரமான எக்கனாமியில் எடுத்து அனைவரது பாராட்டுகளைப் பெற்றார். இருப்பினும் தனது பந்து வீசும் வலது கை தோளில் ரத்த கட்டிகள் ஏற்பட்டதால் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். தற்போது குணமடைந்து மீண்டும் அசத்த துவங்கியுள்ள அவர் கடந்த வருடம் தமக்கு இருக்கும் பிரச்சனையின் உண்மையான தாக்கத்தை பற்றி தெரியாமலேயே இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் ஒரு மாதம் தாமதமாக வந்திருந்தாலும் உங்களது ஒரு கையை எடுத்திருக்க வேண்டும் என்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்ததால் மேற்கொண்டு கிரிக்கெட்டில் விளையாட முடியுமா என கவலையடைந்ததாக மோசின் கான் கூறியுள்ளார். இருப்பினும் நல்லவேளையாக சரியான நேரத்தில் தமது மாநிலம் மற்றும் லக்னோ நிர்வாகத்தினரின் உதவியால் குணமடைந்து வந்ததுள்ளதாக நன்றி தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அது மிகவும் கடினமான தருணங்களாக இருந்ததால் கிரிக்கெட்டில் மேற்கொண்டு விளையாடும் நம்பிக்கையை நான் இழந்தேன். ஏனெனில் என்னுடைய கையை உயர்த்த முடியாத காரணத்தால் பந்து வீச்சை முற்றிலுமாக மறந்து விட்டேன். அந்த சமயத்தில் என்னுடைய கையை நேராக உயர்த்த முடியாமல் தவித்த போது பயிற்சியாளர்கள் உதவியும் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் மிகவும் பயந்து கொண்டே மருத்துவமனையை சென்ற போது இன்னும் ஒரு மாதம் தாமதமாக வந்திருந்தால் உங்களது ஒரு கையை எடுத்திருக்க வேண்டும் என்று மருத்துவர் தெரிவித்தார்”

“அதனால் நான் சந்தித்த காயத்தை வேறு எந்த வீரர்களும் சந்திக்கக் கூடாது என்றே விரும்புகிறேன். ஏனெனில் எனது தமனியும் நரம்புகளும் தடுத்தது. நல்ல வேளையாக உத்தரபிரதேச வாரியத்தின் ராஜீவ் சுக்லா சார், லக்னோ அணியின் கோனேகா சார் மற்றும் எனது குடும்பத்தினர் தக்க சமயத்தில் அவர்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தனர்”

இதையும் படிங்க:IPL 2023 : இவர போய் கிங் கோலியோட கம்பேர் பண்ணீங்களே – குட்டி தடவல் மன்னனாக சொதப்பும் லக்னோ வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

“இருப்பினும் அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் நான் மிகவும் தடுமாறினேன். தற்போது குணமடைந்து வந்துள்ள எனக்கு ஆரம்ப கட்ட போட்டிகளில் சுமாராக செயல்பட்டும் தொடர்ந்து வாய்ப்பு கொடுத்த கம்பீர் உள்ளிட்ட பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement