IPL 2023 : இவர போய் கிங் கோலியோட கம்பேர் பண்ணீங்களே – குட்டி தடவல் மன்னனாக சொதப்பும் லக்னோ வீரரை கலாய்க்கும் ரசிகர்கள்

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் இதுவரை பங்கேற்ற 13 போட்டிகளில் 7 வெற்றிகளை பதிவு செய்து 15 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்று வாய்ப்பை நெருங்கியுள்ளது. குறிப்பாக வெற்றிகரமான மும்பைக்கு எதிராக நேற்று நடைபெற்ற 63வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி மார்கஸ் ஸ்டோனிஸ் 89* (47) ரன்கள் எடுத்த அதிரடியில் 20 ஓவர்களில் 177/8 ரன்கள் குவித்தது. அதை துரத்திய மும்பைக்கு ரோஹித் சர்மா 37 (25) ரன்களும் இஷான் கிசான் 59 (39) ரன்களும் எடுத்து 90 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர்.

ஆனால் சூரியகுமார் யாதவ் 7, நேஹல் வதேரா 16, விஷ்ணு வினோத் 4 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய லக்னோ வெற்றிக்கு போராடியும் கடைசி நேரத்தில் டிம் டேவிட் 32* (19) ரன்கள் எடுத்ததால் வெற்றியை நெருங்கிய மும்பைக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. இருப்பினும் அதில் அபாரமாக செயல்பட்ட மோசின் கான் 5 ரன்கள் மட்டுமே கொடுத்ததால் போராடி தோற்ற மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

கலாய்க்கும் ரசிகர்கள்:
முன்னதாக இத்தொடரில் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் மெதுவாக விளையாடி லக்னோ அணிக்கு பெரிய பின்னடைவை கொடுத்து சமீபத்தில் காயமடைந்து பாதியில் வெளியேறினார். அந்த நிலையில் 17 (18), 2 (6), 7 (8), 9 (10), 2 (3), 2 (4), 2 (2), 11* (6), 1 (2), 11 (11) என இந்த சீசனில் ஆரம்பம் முதலே திணறலாக செயல்பட்டு வரும் தீபக் ஹூடா நேற்றைய போட்டியில் வித்தியாசமாக தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற போதிலும் தடவலாக செயல்பட்டு 5 (7) ரன்களில் அவுட்டாகி மீண்டும் பின்னடைவையே கொடுத்தார்.

கடந்த 2015 முதலே ஹைதராபாத், பஞ்சாப் போன்ற அணிகளில் நல்ல வாய்ப்புகளை பெற்றும் சுமாராகவே செயல்பட்டு வந்த அவர் கடந்த வருடம் லக்னோ அணிக்காக முதல் முறையாக வாங்கப்பட்டு 14 இன்னிங்ஸில் 451 ரன்களை விளாசி 1 விக்கெட்டை எடுத்து சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக அசத்தினார். அதனால் இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் அயர்லாந்து மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் சதமடித்து ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டார்.

- Advertisement -

அதனால் அந்த காலகட்டத்தில் சதமடிக்காமல் தடுமாறி வந்த விராட் கோலிக்கு பதிலாக 3வது இடத்தில் விளையாடும் அளவுக்கு தீபக் ஹூடா அசத்துவதாக சில முன்னாள் வீரர்கள் பாராட்டினர். அத்துடன் ஒரு காலத்தில் சச்சின், சேவாக் ரெய்னா என பேட்ஸ்மேன்கள் பகுதி நேர பந்து வீச்சாளர்களாக மாறி முக்கிய விக்கெட்டுகளை எடுத்து உலகக் கோப்பை வெற்றிகளில் பங்காற்றியதை போல தற்போதைய இந்திய அணியில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் யாரும் பந்து வீசுவதில்லை என்ற குறை இருந்து வருகிறது. அப்படிப்பட்ட மிகப்பெரிய குறையைப் போக்கி விராட் கோலிக்கு பதிலாக 2023 உலக கோப்பையில் விளையாடும் அளவுக்கு அவர் அசத்துவதாகவும் சில ஒப்பீடுகள் காணப்பட்டன.

ஆனால் விராட் கோலி செய்த சாதனைகளிலும் பெற்றுக் கொடுத்த வெற்றிகளிலும் 10% கூட சாதிக்காத அவர் இந்த சீசனில் தொடர்ந்து சொதப்பு வருகிறார். அதனால் இவரை போய் விராட் கோலியுடன் கம்பேர் செய்தீர்களே என்று அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க:LSG vs MI : பலம்வாய்ந்த மும்பை அணியை நாங்கள் வீழ்த்த இதுவே காரணம். வெற்றிக்கு பிறகு – க்ருனால் பாண்டியா மகிழ்ச்சி

மேலும் தடவலாக செயல்பட்ட கேஎல் ராகுல் காயமடைந்து வெளியே சென்றாலும் அவருடைய சிஷ்யனை போல் சின்ன தடவல் மன்னனை போல செயல்பட்டு பின்னடைவை ஏற்படுத்தி வரும் தீபக் ஹூடா இந்தியாவுக்கு மட்டுமல்ல லக்னோ அணியில் கூட விளையாடுவதற்கு பொருத்தமற்றவர் என்றும் ரசிகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

Advertisement