மேலும் ஒரு பிரபல கிரிக்கெட் வீரருக்கு கொரோனா உறுதி. ரசிகர்கள் அதிர்ச்சி – விவரம் இதோ

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி தனது கோர தாண்டவத்தை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் உலகெங்கிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் கிரிக்கெட் வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. இந்த வைரஸ் பாதிப்பினால் கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்து வருகிறது.

corona 1

தற்போது அந்த கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் பல கிரிக்கெட் வீரர்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தனர். குறிப்பாக பாகிஸ்தான் அணியை சேர்ந்த முன்னாள் வீரரான சாகித் அப்ரிடி உட்பட 8 பாகிஸ்தான் வீரர்களுக்கும், வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் மோர்தசாவிற்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

தற்போது அவர்கள் அந்த தாக்கத்திலிருந்து மீண்டு உள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் ஒரு வீரராக வங்கதேச அணியை சேர்ந்த முஷாரப் ஹூசேன்க்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது உறுதியாகியுள்ளது என தகவல் வெளியாகி உள்ளன.

Hossain

இது குறித்து வெளியான தகவலில் அவருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் மேலும் அவர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்ற தகவலும் உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -